டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயிருக்கு அச்சுறுத்தல்.. மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏக்களுக்கு.. X பிரிவு பாதுகாப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏக்களின் உயிருக்கு அச்சுறுதல் நிலவுவதால், அவர்களுக்கு சிஐஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் போலீஸ் பாதுகாப்பை அளித்து உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.

தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிக தடுப்பூசிகள் தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிக தடுப்பூசிகள்

வங்கத்தில் பாஜக திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றது.

சட்ட ஒழுங்கு பிரச்சனை

சட்ட ஒழுங்கு பிரச்சனை

தேர்தல் முடிவுகளை வெளியானதும், மேற்கு வங்கத்தில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. திரிணாமுல் தொண்டர்கள் தான் பாஜகவினர் மீது திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்துவதாக பாஜக குற்றஞ்சாட்டினர். அம்மாநில ஆளுநர்கூட மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை நிலவுவதாகவும் மம்தா முதலில் அதைக் கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பதவியேற்பு விழாவிலேயே தெரிவித்திருந்தார். இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தே வந்தது.

பாஜக எம்எல்ஏக்களுக்கு அச்சுறுதல்

பாஜக எம்எல்ஏக்களுக்கு அச்சுறுதல்

இதனிடையே மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏக்களின் உயிருக்கு அச்சுறுதல் நிலவுவதாக மத்திய அரசுக்கு மேற்கு வங்க பாஜக கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து பாஜக எம்எல்ஏக்களுக்கு சிஐஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் போலீஸ் பாதுகாப்பை அளிக்க உள் துறை அமைச்சகம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதுகாப்பு அளிக்க உத்தரவு

பாதுகாப்பு அளிக்க உத்தரவு

தேர்தல் முடிவுகள் வெளியான பின் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து உயர் மட்ட அதிகாரிகள் குழு அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. அதன்படி மேற்கு வங்கத்திலுள்ள 61 பாஜக எம்எல்ஏக்களுக்கு X பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்களுக்கு சிஐஎஸ்எஃப் (CISF) எனப்படும், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

Z பிரிவு பாதுகாப்பு

Z பிரிவு பாதுகாப்பு

அதேநேரம் மற்ற பாஜக சட்டசபை உறுப்பினர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. அவர்களுக்கு சிஆர்பிஎஃப் என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பை அளிக்கவுள்ளனர். மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுவேந்து அதிகாரிக்கு ஏற்கனவே சிஆர்பிஎஃப் படையினரால் Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
center orders to give CRPF protection to BJP MLAs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X