ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய A டூ Z முக்கிய தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இதில் பலருக்கும் பலவித சந்தேகங்கள் இருக்கும். இதில் யாருக்கு எவ்வளவு பலன் கிடைக்கும். அரசு ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவு என்று இது குறித்த அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும் நாம் பார்க்கலாம்.

மத்திய அரசு இப்போது யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.. இது ஓய்வு பெற்ற பிறகு அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இது குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.

pension union government


இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையில் இருப்போர் கடைசி 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகையை ஓய்வூதியமாகப் பெறுவார்கள். இது அரசு ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும், ஓய்வூதியத்தில் 60% தொகை குடும்ப ஓய்வூதியமாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது. குறைந்தபட்சம் மாதம் 10,000 ரூபாய் இதில் கிடைக்கும். மேலும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இது அட்ஜெஸ்ட் செய்யப்படும் என்பதால் இது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

புதிய ஓய்வூதியம்: யுபிஎஸ் என்பது அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியக் கொள்கையாகும். ஊழியரின் சராசரி அடிப்படை ஊதியத்தின் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுவதை இது உறுதி செய்கிறது. ஓய்வூதியதாரர் உயிரிழந்தால் அவரை சார்ந்து இருப்போருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுவதை இது உறுதி செய்கிறது.

எப்போது அமலுக்கு வருகிறது: இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரும் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன? புதிய பென்ஷன் திட்டத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?


எப்படி கணக்கிடப்படுகிறது:
குறைந்தபட்சம் 25 வருட வேலை செய்தோர் ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். 25 ஆண்டுகளுக்குக் குறைவாக வேலை செய்திருந்தால் அவர்கள் எத்தனை ஆண்டுகள் வேலை செய்தார்களோ அதற்கேற்ப ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கப்படும். இந்த யுபிஎஸ் ஓய்வூதியத்திற்குத் தகுதி பெற் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அரசு வேலையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

குடும்ப ஓய்வூதியம்:
ஓய்வுபெற்ற ஊழியர் உயிரிழந்தால், அவர் கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60% தொகை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.

உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து அதன் பிறகு ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் மட்டுமின்றி பணியாளர்கள் ஓய்வு பெறும்போது குறிப்பிட்ட தொகையையும் அவர்கள் பெறுவார்கள். ஒவ்வொரு ஆறு மாத முடிவில் அவர்கள் பெற்ற மாத ஊதியத்தில் 1/10 ஆக இது கணக்கிடப்படும். இந்த தொகை ஓய்வூதியத்தைப் பாதிக்காது.

ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்படும். பணவீக்கம் அதிகரிக்கும் போது ஊழியர்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கும்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்கள் இந்த யுபிஎஸ் திட்டத்திற்கு மாற வாய்ப்பு தரப்படும். அரசு ஊழியர்கள் தங்களுக்கு என்பிஎஸ் அல்லது யுபிஎஸ் இரண்டில் எது தேவை என்பதைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், ஒரு முறை தேர்வு செய்தால் அதுவே இறுதி. அதன் பிறகு மாற முடியாது.

பங்களிப்பு:
யுபிஎஸ் முறையில் அரசு ஊழியரின் பங்களிப்புகள் அப்படியே இருக்கும். அதேநேரம் அரசின் பங்களிப்பு 14%இல் இருந்து 18.5% ஆக அதிகரிக்கும்.

யாருக்கு லாபம்:
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். மாநில அரசுகளும் யுபிஎஸ் முறையைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து மத்திய அரசுகளும் யுபிஎஸ் முறைக்கு மாறினால் 90 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த யுபிஎஸ் என்பது பணவீக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கும். அதேபோல நிலையான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியங்களை இது உறுதி செய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+