எதிர்மறை சிந்தனையுடன் அமைக்கப்படும் கூட்டணி வெற்றி பெறாது.. என்டிஏ கூட்டத்தில் பிரதமர் மோடி அட்டாக்
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மறைமுகமாக விமர்சித்தும் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்கட்சிகள் முழு வீச்சில் தேர்தலுக்கு தயராகி வரும் நிலையில், பாஜகவும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு வியூகங்களை வகுக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணி நடத்தும் அதே நாளில் போட்டிக் கூட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.

அதன்படி, இன்று நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- என்.டி.ஏ கூட்டணிக்கு தேசம்தான் முக்கியம். தேசத்தின் பாதுகாப்பு முக்கியம்.
ஸ்திரதன்மையுடன் நடைபெறும் ஆட்சியே இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை பிறக்க காரணம். எதிர்மறையுடனான சிந்தனையுடன் அமைக்கப்படும் கூட்டணி ஒருபோது வெற்றி பெறாது. NDA வில் N - புதிய இந்தியா, D- நாட்டின் வளர்ச்சி, A- மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம். வளர்ச்சியும் மக்களுக்கு அதிகாரமளிப்பதுதான் என்.டி.ஏ கூட்டணிக்கு முக்கியம்.

கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது மிகப்பெரும் பொருளாதார நாடாக மாறும். எதிர்க்கட்சிகள் தங்கள் நலனுக்காக நெருக்கம் காட்டுகிறார்கள். ஆனால், அவர்களால் ஒருங்கிணைந்து வர முடியாது. 2024 தேர்தலுக்கு வெகு தூரம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்கும் மனநிலைக்கு மக்கள் வர வேண்டும். அரசியலில் போட்டி இருக்கலாம். ஆனால் பகைமை இருக்கக் கூடாது.
ஆனால், எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன. அரசியல் நலனை தாண்டி இந்தியாவை மேலாக வைத்துள்ளோம். பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கியது தேசிய ஜனநாயக கூட்டணிதான். பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத தலைவர்களான சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கியிருக்கிறோம். அரசியல் நலனை தாண்டி இந்தியாவை மேலோங்கி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications