'எல்லாம் வல்லவர் அதைச் செய்ய வைத்தார்'.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாயைத் தாக்க முயன்ற வழக்கறிஞர்
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாயைத் தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், நீதிபதிகள் தங்களின் உணர்வுபூர்வமான தன்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன... நான் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை, என் செயலுக்காக வருத்தப்படப் போவதுமில்லை. நான் ஒன்றும் செய்யவில்லை; நீங்கள் என்னைக் கேள்வி கேட்கிறீர்கள். இதைச் செய்ய என்னை இறைவனே தூண்டினார் என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் கூடியது. அப்போது வழக்குகளின் விவரத்தை வக்கீல்கள் குறிப்பிடுவதை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வழக்கறிஞர், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கினார். தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார்.

சனாதன தர்மம் இழிவு
அதற்குள் சுதாரித்துக் கொண்ட காவலாளிகள், அவரை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் நல்ல வேளையாக அந்த செருப்பு தலைமை நீதிபதி மீது விழவில்லை.. குறிப்பிட்டட வழக்கறிஞரை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வழக்கறிஞர், "சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம்" என்று கூச்சலிட்டபடி வெளியேறினார்.
வழக்கறிஞரை பிடித்த போலீஸ்
ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி கவாய், வக்கீல்களை பார்த்து, "இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது" என்று கூறினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், காலணி வீச முயன்ற வக்கீல் பெயர் ராகேஷ் கிஷோர் (வயது 71) என்றும், டெல்லி மயுர் விஹார் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற பதிவாளருடன் இணைந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வக்கீலின் செயலுக்கான நோக்கம் குறித்த தகவல்கள் இனிமேல்தான் தெரியும் என்று போலீசார் கூறினார்கள்.
விஷ்ணு சிலை
இதனிடையே தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிக்கு ஒரு வழக்கு காரணம் என்று கூறுகிறார்கள் வழக்கறிஞர்கள். மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் 7 அடி உயர விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த மாதம் தள்ளுபடி செய்தார்.. அப்போது அவர், "இந்த மனு, விளம்பர நல மனு. போய் அந்த தெய்வத்திடமே ஏதாவது செய்யுமாறு கேளுங்கள். நீங்கள் விஷ்ணு பக்தர் என்றால், பிரார்த்தனை செய்யுங்கள். தியானம் செய்யுங்கள்" என்று கூறினார்.
தலைமை நீதிபதி விளக்கம்
அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் அப்போது கண்டனங்கள் எழுந்தன. அவற்றுக்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் , "நான் அனைத்து மதங்களையும் மதிப்பவன்" என்று விளக்கம் அளித்தார். இந்த பின்னணியில் தான், தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடவுள் செய்ய வைத்தார்
இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி செருப்பை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரிடம் ஏஎன்ஐ செய்தியாளர் இன்று பேட்டி எடுத்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் , "உங்களின் இந்தச் செயல் மேலும் பல இத்தகைய சம்பவங்களுக்கு வழிவகுக்கலாம் அல்லவா?" என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், "நீதிபதிகள் தங்களின் உணர்வுபூர்வமான தன்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன... நான் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை, என் செயலுக்காக வருத்தப்படப் போவதுமில்லை. நான் ஒன்றும் செய்யவில்லை; நீங்கள் என்னைக் கேள்வி கேட்கிறீர்கள். இதைச் செய்ய என்னை எல்லாம் வல்லவரே தூண்டினார்..." (கடவுள் தான் இப்படி செய்ய வைத்ததாக குறிப்பிட்டார்) இவ்வாறு கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications