அம்பேத்கரின் கனவை டெல்லியில் நிறைவேற்றியுள்ளேன் - பெருமிதப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி: 75 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பேத்கரின் கனவுகள் டெல்லியில் நனவாகி வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 240 அரசுப் பள்ளிகளில் 12,430 புதிய ஸ்மார்ட் வகுப்புகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.
பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சிகள் டெல்லி முதல்வரை தீவிரவாதி என்று அழைத்தனர். என்னை தீவிரவாதி என்று சொல்வது சிரிப்பாக இருக்கிறது. இந்த தீவிரவாதி பள்ளிகள் கட்டிவருகிறார் என்றார் கெஜ்ரிவால்.

கெஜ்ரிவால்
இந்நிலையில் இன்று 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்மார்ட் வகுப்புகளை கெஜ்ரிவால் திறந்துவைத்து பேசும்போது, '' ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் கனவுகண்டார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், மற்ற மாநிலங்களில் அவரது கனவு நனவாகவில்லை.

அம்பேத்கர் கனவு
அம்பேத்கர் கண்ட கனவு டெல்லியில் நிறைவேறி இருக்கிறது. இதையறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். டெல்லி அரசு கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 20,000 வகுப்பறைகளை கட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து கூட 20,000 வகுப்பறைகளை கட்ட முடியவில்லை. தலைவர்கள் பள்ளிகளைத் தவிர எதற்கும் பயப்படுவதில்லை. நல்ல பள்ளிகள் கட்டினால் ஜாதி, மதத்தின் பெயரால் தலைவர்களுக்கு ஓட்டு கிடைக்காது.

பள்ளிகள்
இந்த பள்ளிகள் உறுதியான தேசபக்தர்களை உருவாக்கும். நாங்கள் பள்ளிகளை கட்டவில்லை, தேசபக்தர்களை உருவாக்க தொழிற்சாலைகளை அமைக்கிறோம். கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பெரிய தலைவர்கள், கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்று கூறி வருவது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. பயங்கரவாதி என்று சொல்லும் நபர் இன்று 12,430 வகுப்பறைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்'' என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பஞ்சாப் தேர்தல்
கெஜ்ரிவால் காலிஸ்தான் நாட்டு பிரதமராக ஆசைப்படுகிறார் என பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து கெஜ்ரிவால் மீது சர்ச்சைகள் சுற்றிவந்தன. அதற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்தார் கெஜ்ரிவால். தற்போது டெல்லியில் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications