ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. மேற்கு ஆசியா, ஹமாஸ் விவகாரம் குறித்து ஆலோசனை.. ஏன் முக்கியம்?
டெல்லி: இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 31-வது நாளை எட்டியுள்ளது. காசா மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான போரால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போரால் மத்திய ஆசியாவில் நிலவும் கடினமான சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்தும் பேசினர். மேற்கு ஆசியாவில் நிலவும் கடினமான சூழல் குறித்தும் இரு தலைவர்களும் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
அதோடு, அந்த பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை மீண்டும் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர். ஈரான் அதிபருடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் குறித்தும் இந்த மோதலால் மேற்கு ஆசியாவில் நிலவும் கடினமான சூழ்நிலை குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். சபஹார் துறைமுகம் உள்பட இந்தியா - ஈரான் இடையேயான இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னெற்றம் குறித்தும் பேசினோம்" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான போர் தொடந்து நீடித்துக்கொண்டே உள்ளது. சமீப நாட்களாக காசா மீது மிகக் கடுமையான தக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே நாளில் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியும் ஈரான் அதிபரும் தொலைபேசி வாயிலாக பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்?












Click it and Unblock the Notifications