டெல்லியில் பாஜகவை கைவிட்ட அதிமுக.. கூட்டணி பேச்சுக்கு நடுவே.வக்பு மசோதாவில் எம்பிக்கள் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அதன்பிறகும் கூட டெல்லியில் பாஜகவுக்கு, அதிமுக அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை வழங்கி உள்ளது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

வக்ஃபு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள லோக்சபா மற்றும் ராஜ்யசபா என 2 சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் உரிமைகளை இந்த மசோதா பறிப்பதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

bjp aiadmk Waqf Amendment Bill

வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும் கூட கடந்த 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

லோக்சபாவில் கடந்த 2 ம் தேதி இரவில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் ஓட்டளித்தனர். அதன்பிறகு மறுநாளான 3ம் தேதி ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எம்பிக்கள் இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அதன்பிறகு ராஜ்யசபாவிலும் இந்த மசோதா என்பது நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் மொத்தம் 128 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். 95 எம்பிக்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தனர்.

ராஜ்யசபாவை பொறுத்தவரை எதிர்க்கட்சியான ‛இந்தியா' கூட்டணிக்கு மொத்தம் 81 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் 81யை தாண்டி மொத்தம் 95 பேர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ‛இந்தியா' கூட்டணியை தவிர்த்து யாரெல்லாம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற கேள்வி எழுந்தது.

அதில் அதிமுகவின் ராஜ்யசபா எம்பிக்கள் 4 பேரும் அடங்குவர். சந்திரசேகரன், தர்மர், சிவி சண்முகம், தம்பிதுரை உள்ளிட்டவர்கள் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் 4 பேரும் வக்ஃபு மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். இதுதொடர்பாக தம்பிதுரை பேசும்போது, ‛‛அதிமுக எப்போது இஸ்லாமிய மக்களின் நலன்களை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது'' என்று தெரிவித்து இருந்தார்.

வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மாதமே தீர்மானம் நிறைவேற்பற்பட்டது. இதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. அந்த நிலைப்பாட்டை மாற்றாமல் அதிமுக அப்படியே ராஜ்யசபாவில் பின்பற்றி மத்திய அரசின் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஓட்டளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒடிசா முன்னாள் முதல்வரான நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சியின் எம்பிக்களும் இந்த மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். இந்த கட்சிக்கு மொத்தம் 7 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளன. இதில் 4 பேர் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். பிஜூஜனதாதளம் கட்சியை பொறத்தவரை மசோதாவுக்கு அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 4 பேர் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர்.

அதேபோல் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான ராஜ்யசபா எம்பிக்கள் இந்த மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். இதனால் தான் ராஜ்யபசாவில் மசோதாவுக்கு எதிராக மொத்தம் 98 எம்பிக்கள் ஓட்டளித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+