Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறுப்பு பேச்சு? மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக டெல்லி போலீசார்! கோர்ட்டில் பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் இன்று டெல்லி போலீசார் அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங் உள்ளார். பாஜக எம்பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.

மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா உள்பட ஏராளமானவர்கள் கடந்த மாதம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இருப்பினும் கூட போலீசார் அவரை கைது செய்யவில்லை. இதனால் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். மேலும் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவின்போது அந்த இடத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற வீரர், வீராங்கனைகள் தரதரவென இழுத்து கைது செய்யப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறி பதக்கங்களை கங்கையில் வீசுவதாக கூறிய வீரர், வீராங்கனைகள் அதனை கடைசி நேரத்தில் கைவிட்டனர்.

இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு முன்பு வீரர், வீராங்கனைகள் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து 6 மணிநேரம் பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வரும் 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக வீரர், வீராங்கனைகள் ஒத்திவைத்துள்ளனர். இதுபற்றி அனுராக் தாகூர் கூறுகையில், ‛‛வரும் 15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்து முடிக்கப்படும். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். வரும் 30ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் நடத்தப்படும்'' என்றார்.

Amid of Protest no offence of hate speech made out against wrestlers, Delhi Police tells court

இதற்கிடையே தான் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் எதிராக வெறுப்பு பேச்சு தொடர்பான புகார், பொய் குற்றச்சாட்டுகள் கூறியதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது ஆதாரமற்ற அதேவேளையில் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள். மேலும் பிரதமர் மோடியை மிரட்டும் வகையில் கோஷமிட்டனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் Action Taken Report எனும் நடவடிக்கை தொடர்பான அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் எந்த வெறுக்கத்த கோஷத்தையும் வீரர், வீராங்கனைகள் எழுப்பவில்லை. இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினர். இது மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க வீராங்கனைகளுக்கு எதிராக அடல் ஜன் கட்சியின் தேசிய தலைவர் பாம் பாம் மகாராஜ் நவுஹாதியா என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஜூலை 7ம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+