வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை! பிரிஜ் பூஷணின் சொத்து இவ்வளவா? 54 கல்லூரி, பள்ளிகளாமே! அடேங்கப்பா
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே தான் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு சொந்தமாக கல்லூரி, பள்ளிகள் என 54 கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் இருப்பதும் அவரது சொத்து மதிப்பு குறித்த பிரமிப்புட்டும் தகவலும் வெளியாகி உள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக எம்பியாகவும் உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங் விளங்கி வருகிறார். இதற்கிடையே தான் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்துள்ளன. ஆனாலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரிடெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்னைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் பிரிஜ் பூஷணை கைது செய்யவில்லை. இதற்கிடையே தான் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 15ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
இதற்கிடையே தான் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிஜ் பூஷண் சரண் சிங் தற்போது 6 வது முறையாக எம்பியாக உள்ளார். 2019ல் உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக இருக்கிறார். இதற்கு முன்பு கோண்டா, பால்ராம்பூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக இருந்தார்.
இவர் முதல் முதலாக 1991ல் எம்பியானார். அதன்பிறகு 1999, 2004, 2009, 2014, 2019 தேர்தல்களில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். இவர் 2009 தேர்தலில் மட்டும் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிற 5 தேர்தல்களிலும் பாஜகவில் களமிறங்கி வாகை சூடி எம்பியாகி உள்ளார். மத்திய அமைச்சர் பதவியை பெற முயன்ற நிலையில் அவரது கனவு பலனளிக்கவில்லை.
இவர் உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் வசித்து வருகிறார். மாணவர் பருவத்தில் 1980ல் அரசியலில் நுழைந்தார். இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்று கொண்ட இவர் அயோத்தி ராம்மந்திர் மூமெண்ட்டில் பங்கேற்றார். பாபர் மசூதி வழக்கில் இவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அதன்பிறகு நீதிமன்றம் விடுவித்தது.
இளம் வயதில் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் அப்படியே இந்திய சம்மேளன தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த பதவியில் அவர் நீடித்து வரும் நிலையில் தான் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் 2 வழக்குகளை எதிர்கொள்கிறார். இதுதவிர அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 38 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
பிரிஜ் பூஷண் சரண் சிங் உத்தர பிரதேசத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கோண்டா, பால்ராம்பூர், பாராய்ச், ஷரராவஸ்தி ஆகிய 4 மாவட்டங்களில் இவர் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, ஹோட்டல்கள் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக அல்லது இவர் பங்களிப்பில் மொத்தம் 54 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் மொத்தம் 80 ஆயிரம் மாணவர்கள், 3,500 ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்த கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மூலம் அவருக்கு பலருக்கும் சேவையும் செய்து வருகிறார். இதனால் தான் அவருக்கு அங்கு அதிக செல்வாக்கு உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கூறிய காரணங்கள் தான் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவிடாமல் மத்திய அரசை தடுப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் பிரதீக் பூஷண் சதர் தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார். மனைவி கேத்கி சிங் பாஜக முன்னாள் எம்பியாவார். தற்போது கோண்டா மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார். பிரிஜ் பூஷண் சரண் சிங் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தனக்கு ரூ.10 கோடி சொத்துகள் இருப்பதாகவும், ரூ.6 கோடிக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications