டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பரவல் புதிய உச்சம்.. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைப்பு... யுபிஎஸ்சி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 2.63 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த ஐந்து நாட்களாகவே நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தைத் தாண்டியே இருந்தது.

Amid spike in Corona Civil service interview postponed

இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பரவல் மோசமாக உள்ளதால் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

நேற்று ஸ்டாலின் கடிதம்.. இன்று மத்திய அரசு அறிவிப்பு.. இனி மாநில அரசுகளில் நேரடி தடுப்பூசி கொள்முதல்நேற்று ஸ்டாலின் கடிதம்.. இன்று மத்திய அரசு அறிவிப்பு.. இனி மாநில அரசுகளில் நேரடி தடுப்பூசி கொள்முதல்

முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்சி 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
UPSC latest announcement postponing Civil service interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X