பாஜகவுக்கு செக்.. ராகுல் காந்தியை சந்தித்த நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்!மெகா கூட்டணிக்கு பலே பிளான்
டெல்லி: பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான பணியை நிதிஷ் குமார் முன்னெடுக்கும் வகையில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுவது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரள்வதில் பிரச்சனை உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ்கள் 3வது அணியை அமைப்பதில் தீவிரமாக உள்ளன.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் உள்ளிட்டவர்கள் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பிற எதிர்க்கட்சிகள் கைகோர்ப்பதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில் தான் இன்று நடந்த ஒரு நிகழ்வு தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இவர் பாஜக கூட்டணியை சமீபத்தில் முறித்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். இதனால் பாஜக தற்போது பீகாரில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் பீகாரில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகள் இடையே நல்ல உறவு உள்ளது. இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டில் நடந்தது.
இதில் ராகுல் காந்தி பங்கேற்றார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியை இடம்பெற செய்வது மற்றும் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை பாஜகவுக்க எதிராக ஓரணியில் திரட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பிற கட்சிகளை பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் ஓரணியில் திரட்டும் பணியில் நிதிஷ் குமாரை ஈடுபட வைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் ஒன்றிணைக்கும் பாலமாக நிதிஷ் குமார் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இன்று நடந்த இந்த சந்திப்பு என்பது தேசிய அரசியலில் அனைவரின் பார்வையையும் திரும்பி உள்ளது. குறிப்பாக பாஜக இந்த தலைவர்களின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications