7 அசத்தலான அறிவிப்புகள்.. விவசாயிகளை குளிர வைத்த மோடி.. உடைக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம்
டெல்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொதுவாக அதன் விவசாயக் கொள்கைகள் காரணமாக பல விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் மிகவும் கவனிக்க வேண்டிய விவகாரம் என்றால் 2020 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மூன்று விவசாய சட்டங்ள் ஆகும் இந்த சட்டத்திற்கு எதிராக நாயுடு முழுக்க பரவலான போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கடுமையான போராட்டங்கள் நடந்தன.
விவசாயத்திற்கு எதிராக அரசு செயல்படுவதாகவும், கார்பரேட்களின் நலன்களை மனதில் வைத்து அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் மோசமான விமர்சனங்களை வைத்தன. ஆனால் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள 7 முக்கியமான விவசாயச திட்டங்கள் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு என்ற பொய்யான வாதங்களை உடைக்கும் வகையில்.. இந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. விவசாயிகளின் நலன்களை பேணும் வகையில் இந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

விவசாய சட்டங்கள் சர்ச்சை: தவறான புரிதல் அல்லது தவறான தகவல்?
விவசாயத் துறையை தாராளமயமாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட மூன்று விவசாய சட்டங்கள் ஆரம்பத்தில் அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளாக சித்தரிக்கப்பட்டன. ஒழுங்குபடுத்தப்பட்ட APMC சந்தைகளுக்கு வெளியே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க அனுமதிப்பது, ஒப்பந்த விவசாயத்தை அறிமுகப்படுத்துவது, அத்தியாவசியப் பொருட்களின் மீதான இருப்பு வரம்புகளை நீக்குவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன
இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு அதிக சந்தை அணுகல் மற்றும் நல்ல விலையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்டன. இருப்பினும், இந்த சட்டங்கள் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது, முதன்மையாக இந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையைத் தகர்த்துவிடும் என்ற அச்சம் எழுந்தது. அதேபோல் பெரிய நிறுவனங்களின் சுரண்டலுக்கு வழிவகுக்கும், இது விவசாயிகளை பாதிப்படையச் செய்யும் என்ற அச்சம் எழுந்தது. இதை பற்றிய பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.
இதை தொடர்ந்து இந்த சட்டத்திற்கு எதிராக தீவிரமான, கடுமையான எதிர்ப்புகள் வந்தன.விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு இருப்பதாக பொய்யான கருத்துக்கள், பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகள் இந்த அதிருப்தியை பயன்படுத்தி, பாஜகவை விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தின. இந்த போராட்டங்களுக்கு எல்லாம் முடிவுக்கட்டும் விதமாக பிரதமர் மோடி 2021 நவம்பரில் சட்டங்களை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்தார். விவசாயிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மோடி இதை செய்தால் அரசியலுக்காக மோடி இப்படி செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த பிரச்சாரத்தை அந்த அளவிற்கு பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
புதிய முயற்சி: விவசாயிகளுக்கு ஆதரவான அசத்தலான நடவடிக்கை
விவசாயச் சட்டங்களால் பின்னடைவு ஏற்பட்டாலும், மோடி அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. உதாரணமான ₹13,966 கோடி மதிப்பீட்டில் ஏழு முக்கிய திட்டங்களுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்ததன் மூலம் மோடி அரசு விவசாயிகள் மீது கொண்டு உள்ள அக்கறை நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறை மீது மோடி கொண்டுள்ள கரிசனம், தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை இந்த புதிய 7 அறிவிப்புகள் நிரூபிக்கின்றன. வருமானத்தை உயர்த்துவது, காலநிலையை எதிர்கொள்வது ஆகியவற்றை மனதில் வைத்து இந்த 7 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
டிஜிட்டல் விவசாயம்:
மத்திய அரசின் இந்த முயற்சிகளில் முன்னணியில் "டிஜிட்டல் வேளாண்மை மிஷன்" உள்ளது, இதற்கு ₹2,817 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மிஷன் மூலம் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு மற்றும் புவிசார் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தை புகுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி விவசாய நடைமுறைகளில் புரட்சியை ஏற்படுத்துவது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயத் தரவுகளின் விரிவான டிஜிட்டல் களஞ்சியமான அக்ரி ஸ்டேக்கை உருவாக்குதல் மற்றும் விவசாயிகள் பதிவேடு மற்றும் கிராம நில வரைபடப் பதிவேட்டை உருவாக்குதல் இந்த திட்டத்தின் ஒரு அங்கம் ஆகும். மேம்படுத்தும் விவசாயிகளை நேரடியாக கொள்முதல் செய்பவர்களுடன் இணைப்பதன் மூலம் இடைத்தரகர்களின் பங்கைக் குறைத்து, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு:
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான பயிர் அறிவியல் திட்டம் என்று திட்டமும் மத்திய அரசால் அறிவிக்கப்ப்டறது உள்ளது. ₹3,979 கோடி பட்ஜெட்டில், அரசாங்கத்தின் மற்றொரு முக்கியமான திட்டமாக இது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முயற்சி விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மரபணு முன்னேற்றம் மற்றும் விவசாய மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது உள்ளது . பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களுக்கு விவசாயிகளைத் தயார்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் இந்தியாவின் விவசாயத் துறையின் பின்னடைவு சரி செய்தி, எதிர்கால உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை உறுதி செய்கிறது
விவசாயக் கல்வி மற்றும் கால்நடை ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல்:
விவசாயத்தில் கல்வி மற்றும் கால்நடைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விவசாயக் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துவதற்கு ₹2,291 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திட்டத்துக்கு ₹1,702 கோடியும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முன்முயற்சிகள் அடுத்த தலைமுறை விவசாயிகளை ஆதரிப்பதுடன், அவர்களுக்கு நம்பிக்கையும் வழங்குகிறது. கால்நடை இனங்களின் மரபணு முன்னேற்றத்தை ஊக்குவிப்பதையும் இந்த திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
பாஜக 'விவசாயிகளுக்கு எதிரானது': தகர்த்தெறியப்பட்ட பிரச்சாரம்
இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்த ஒப்புதல் மூலம், மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது என்று நீண்ட காலமாக வைத்து வந்த பிரச்சாரம் உடைத்து எறியப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் மேம்படும், வருமானம் அதிகரிக்கும். அவர்களின் செலவுகள் குறையும். விவசாயச் சட்டங்கள் சர்ச்சையானது அரசாங்கத்தின் மீது தற்காலிகமாக ஒரு கரையை ஏற்படுத்தியது. இந்த கரையை போக்கியதோடு விவசாயிகள் முகத்தில் இந்த அறிவிப்புகள் சிரிப்பையும் வரவழைத்து உள்ளது. அதோடு பாஜகவிற்கு எதிரான பிரச்சாரங்களையும் உடைத்து நொறுக்கி உள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications