25 - 15 டீல்.. “சவுத்ல ஆள் இல்லயோ..” டெல்லியில் தாமரை தலைவர் நக்கல்! நெளிந்த இலைகள் - நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்து இருக்கும் நிலையில், அந்த சந்திப்பின்போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து இருக்கிறார் அதிமுக முன்னாள் நிர்வாகி ஆஸ்பயர் சுவாமிநாதன்.

அதிமுக பொதுச்செயலாளராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரும் அவருடன் பயணம் சென்றனர்.

Amit shah and JP Nadda asked about south Tamilnadu leaders to Edappadi

இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்கள். 50 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில் பாஜக நிர்வாகிகள் அதிமுகவுக்கு தாவியதை தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி பூசல் மற்றும் அண்ணாமலையின் அதிமுகவுக்கு எதிரான பேச்சுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த சந்திப்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 2024 தேர்தலில் பாஜக வலுவாக இருக்கும் இருக்கும் தொகுதிகளை கூடுதலாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அமித்ஷாவும் ஜேபி நட்டாவும் அதிமுக தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே முடித்துவிட்டு அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதாகவும், கூட்டணியில் உள்ள வலுவான கட்சிகள் குறித்த தகவல்களையும் அமித்ஷாவும் ஜேபி நட்டாவும் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் பாஜக தலைவர்கள் அதிமுக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.

அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பங்களை ஏற்படுத்தும் எந்த செயல்பாடுகளும் இல்லாமல் சுமூகமாக உறவு இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் கிடையாது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Amit shah and JP Nadda asked about south Tamilnadu leaders to Edappadi

இதனை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள அதிமுக முன்னாள் நிர்வாகி ஆஸ்பயர் சுவாமிநாதன் 25 - 15 டீல் சீல் என்று குறிப்பிட்டுள்ளார். 40 தொகுதிகளை 25 - 15 என பிரித்துக்கொண்டதையே இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு பதிவில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகாக்களிடம் பாஜக தலைவர்கள் இந்த சந்திப்பின்போது கேட்டதாக பெயர் குறிப்பிடாமல் சில தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார் ஆஸ்பயர் சுவாமிநாதன்.

அதில், "டெல்லிக்கு சென்ற தலைவரிடம், "6 பேர் வந்திருக்கீங்க, சரி. தெற்கில் கணிசமாக வாழும் சமுதாயத்திலிருந்து ஒருவரை கூட அழைத்து வரவில்லையே. ஆள் கிடைக்கலயோ..." என நக்கல் அடித்துவிட்டாராம் தேசிய கட்சி தலைவர். "வந்திருக்காங்க. ஆனா, வெளில நிக்கவெச்சுருக்கோம்..." என நெளிந்திருக்கிறார் தலைவர்." என்று குறிப்பிட்டு உள்ளார். அமித்ஷா எடப்பாடி சந்திப்பை வைத்தே ஆஸ்பயர் சுவாமிநாதன் இப்பதிவை வெளியிட்டு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+