"எல்லையில் புகுந்த மியான்மர் ராணுவம்.." சாட்டையை சுழற்றிய அமித் ஷா.. கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
டெல்லி: இந்தியா மியான்மர் இடையே எல்லையில் மத்திய அரசு பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இதற்கான காரணம் என்ன.. பின்னணி என்ன என்புத குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மருக்கும் இடையே கடந்த காலங்களில் நல்ல உறவே இருந்துள்ளது. இதன் காரணமாகவே இரு நாட்டு எல்லைகளில் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது.

ஆனால், கடந்த சில மாதங்களாகவே எல்லையில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவுக்குத் திருப்திகரமாக இல்லை. இதற்கிடையே இந்தியா மியான்மர் எல்லையில் மத்திய அரசு இப்போது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
இந்தியா மியான்மர் எல்லை: மத்திய உள்துறை அமைச்சகம் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா-மியான்மர் எல்லையில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதாவது இதற்கு முன்பு இரு நாட்டு மக்கள் எல்லையைத் தாண்டி 16 கிமீ வரை பாஸ்போர்ட் அல்லது விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் வரலாம் என்ற நிலை இருந்தது.. இப்போது அதை நீக்குவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் தேவையில்லாத சம்பவங்களைத் தவிர்க்கவும் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த ப்ரீ மூவ்மென்ட் ரெஜிம் (Free Movement Regime) முடிவுக்கு வந்துள்ளதாக அமித் ஷா அறிவித்துள்ளார்.
மத்திய அரசு அதிரடி: முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், அமித் ஷா இது தொடர்பாக வேறு சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருந்தார். அதாவது ஊடுருவலைத் தடுக்கவும் உள் நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியா மியான்மர் இடையேயான 1,643-கிமீ எல்லையில் வேலி அமைக்கப்படும் என அவர் அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். எல்லைகளைக் கண்காணிக்க ஹைபரிட் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மணிப்பூரின் மோரேயில் 10 கிமீ தூரம் ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கூடுதலாக 20 கிமீர தூரத்திற்கு வேலி அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தை பொருத்தவரை அங்கே கடந்தாண்டு இன வன்முறை ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். மணிப்பூரைச் சேர்ந்த பழங்குடியினருக்கும் மியான்மரின் சின் மாநிலத்தில் உள்ள பழங்குடியினருக்கும் நல்ல ஒரு உறவு இருக்கிறது. இதனால் அவர்கள் மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைவதாகவும் புகார்கள் எழுந்தன. எல்லையில் வேலியை அமைக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கதறும் மாநில அரசு: மேலும், இப்போது மியான்மரில் உள்நாட்டு மோதல் நிலவி வருகிறது. அங்கே கிளர்ச்சியாளர்கள் ராணுவ முகாம்களைப் பிடித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 600 மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மிசோரம் அரசு நேரடியாக மத்திய அரசிடம் முறையிட்டு இருந்தது. இதுவும் இரு நாடுகளுக்கும் இடையே இந்த கட்டுப்பாடுகளை அறிவிக்க முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
எல்லை: மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மியான்மருடன் சுமார் 1,643 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள பழங்குடியின மக்கள் இந்த Free Movement Regime மூலம் 16 கிமீ வரை கட்டுப்பாடு இல்லாமல் வந்து செல்லலாம் என்ற நிலை இருந்தது. கடந்த 1970ஆம் ஆண்டில் இந்த முறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இதைக் கடந்த 2018இல் மோடி அரசு மீண்டும் புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications