பாகிஸ்தான் தூக்கத்தை குழிதோண்டி புதைத்த அமித்ஷா விசிட்- அரபிக் கடலில் இனி இந்தியாவின் ஆட்டம்தான்?
டெல்லி: அரபிக் கடலில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர்ச்சைக்குரிய சர் கிரீக் மற்றும் ஹராமி நாலா பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார். மேலும் எல்லை பாதுகாப்பு படை கப்பல்கள், படகுகளை நிறுத்தக் கூடிய மூரிங் பிளேஸ் தளத்துக்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தின் ஒரு பகுதி ரான் ஆப் கட்ச். பல நூறு கிலோ மீட்டர் விரிந்து பரந்து கடக்கும் சதுப்பு நிலப் பகுதி. இதன் ஒரு முனைதான் இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளாக பிரிகிறது. பாகிஸ்தானுடனான மிக முக்கியமான எல்லை பிரச்சனை உள்ள சர் கிரீக் என்பது இங்குதான் இருக்கிறது.

சர் கிரீக் சதுப்பு நிலப் பகுதி என்றாலும் இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும் அதிகம் இருக்கக் கூடிய இடம். பாகிஸ்தானிலிருந்து கடத்தல் பொருட்கள் கொண்டுவருவதற்கும் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்குமான வாய்ப்பு உள்ள இடம். இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் உள்ள பகுதி. இந்த சர் கிரீக் அமைந்திருக்கும் கட்ச் பகுதியால்தான் 1965-ல் பாகிஸ்தானுடன் யுத்தமே வந்தது. 1965-ம் ஆண்டு இந்த ரான் ஆப் கட்ச் பகுதியில்தான் பாகிஸ்தான் தமது ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. இதன் பின்னரே இந்தியா- பாகிஸ்தான் போரும் வெடித்தது. போரின் முடிவில் குறிப்பிட்ட சர் கிரீக்கின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசமானது. இதன் மற்றொரு பகுதிதான் ஹராமி நாலா.
மும்பை தாக்குதலின் போது அஜ்மல் கசாப் தாம் இந்தியாவுக்குள் ஊடுருவ தேர்ந்தெடுத்தது இந்தப் பகுதியைத்தான் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது. பொதுவாக நாட்டின் உள்துறை, பாதுகாப்பு அமைச்சர்கள் அதிக முறை பயணம் செய்யாத எல்லை பகுதிகளில் இதுவும் ஒன்று.
இந்த சர் கிரீக், ஹராமி நாலா பகுதிக்குதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி விசிட் அடித்துள்ளார். ஹராமி நாலாவில் எல்லைப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் மற்றும் படகுகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடிய மூரிங் பிளேஸ் (Mooring Place) எனப்படும் தளத்துக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார் அமித்ஷா. மேலும் குஜராத்தின் கட்ச்சில் பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஹராமி நாலாவுக்குச் சென்று அங்குள்ள பாதுகாப்புச் சூழல் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications