சொல்ல வார்த்தைகளே இல்லை.. பிபின் ராவத் குறித்து வீடியோ வெளியிட்ட ஆனந்த் மகிந்திரா!
டெல்லி: ஹெலிகாப்டர் விமான விபத்தில் இறந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உருவம் அரச இலையை பதித்து அது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் சொல்ல வார்த்தைகளே இல்லை என ஆனந்த மகிந்திரா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
பிபின் ராவத்தின் மரணத்திற்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்தன. டெல்லியில் நேற்று வைக்கப்பட்ட பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்க தூதரகம்
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பிபின் ராவத் அமெரிக்காவுக்கு ஒரு வலிமையான நண்பன். இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதை அவர் மேற்பார்வையிட்டு வந்தார் என்று தெரிவித்துள்ளது. அது போல் ரஷ்யாவும், நல்ல நண்பரை இழந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளது.

இலங்கை
இது போல் பாகிஸ்தான், இலங்கை, பிரான்ஸ், நேபாளம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பிபின் ராவத்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத்தின் அஸ்தி கங்கையில் கரைக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது.
|
ஆனந்த் ட்வீட்
இது தொடர்பாக ஆனந்த் மகிந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் அரசு மரத்தின் இலையில் பிபின் ராவத்தின் உருவம் பொரித்தப்படி அமைந்துள்ளது. அதை மெதுவாக மேலே எழுப்பி வானத்தில் காண்பித்தால் அவரது உருவம் தெரிகிறது. அவர் விமானத்தில் போய் காற்றில் கரைந்து விட்டார் என்பதை சுட்டிக் காட்டுவதாக வைத்துக் கொள்ளலாம்.
Recommended Video

வைரல் வீடியோ
இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார். இந்த விபத்து மிகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கருப்பு பெட்டியை ஆராய்ந்தால் அதில் விமானிகள் கடைசியாக என்ன பேசி கொண்டார்கள் என்பது தெரியவரும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications