அம்பானி குடும்பத்தின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம்.. இன்னும் முடியல.. மீண்டும் களைக்கட்டும் ஜாம்நகர்!
டெல்லி: ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு கடந்த வாரம் கோலாகலமாக நடந்த நிலையில், இப்போது அதே போன்ற மற்றொரு கொண்டாட்டம் அதே ஜாம்நகரில் நடந்துள்ளது.
நமது நாட்டில் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை அம்பானி நடத்தி வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கும் மகளுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

இதற்கிடையே அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத் ஜாம்நகரில் கடந்த வாரம் கோலாகலமாக நடந்தது.. இதில் உலகின் டாப் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திருமணம்: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் ஒருவருக்கொருவர் பல ஆண்டுகளாக அறிந்திருக்கிறார்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் நண்பர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் மிகவும் தாமதமாகவே டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளாக இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், இந்தாண்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். வரும் ஜூன் மாதம் அவர்களின் திருமணம் நடக்கும் நிலையில், அதற்கு முன்னதாக கடந்த வாரம் நாடே வியக்கும் வகையில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமா பிரபலங்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், முக்கிய தொழிலதிபர்கள் என 1,000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம்: ஆனந்த் அம்பானியின் இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக இருந்தது, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். ஆனால், இத்துடன் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், அது தவறு. இன்னுமே கூட ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கடந்த புதன்கிழமை, பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாருக்கான், சல்மான் கான், ஜான்வி கபூர், பாடகர் அரிஜித் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் மீண்டும் ஜாம்நகருக்குத் திரும்பினர்.. அம்பானி குடும்பத்தினர் திருணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தைத் திட்டமிட்டபடி நடத்தித் தந்தவர்களுக்குச் சிறப்புக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த நிலையில், அதில் கலந்து கொள்ளவே இப்போது பாலிவுட் பிரபலங்கள் அங்கே சென்றுள்ளனர்.
ரிலையன்ஸ் ஊழியர்கள்: ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், குறிப்பாக ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது. தங்களின் ஜாம்நகர் குடும்பத்திற்காக இந்த கொண்டாட்டம் நடத்தப்படுவதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். முந்தைய கொண்டாட்டங்களில் இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வுகளிலும் பின்பற்றப்படுமாம். இதுவும் மொத்தம் மூன்று நாள் நாட்கள் நடக்கும் என தெரிகிறது.
ஜாம்நகரில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்காகப் பிரபல பாலிவுட் நடிகர்கள் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஜாம்நகருக்கு சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் வந்தாரா விலங்கு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களும் கலந்து கொள்கின்றனர். கடந்த வாரம் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் இருந்த அதே வகை உணவுகளும் இதில் இருந்ததாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications