நுரையீரல் வெளியே தெரிய.. மூளை சிதற 12 கி.மீக்கு உடலை இழுத்து சென்ற கார்! திட்டமிட்ட கொலையா? குழப்பம்
டெல்லி: புத்தாண்டு இரவு அன்று டெல்லியில் 20 வயது மதிக்கத்தக்க அஞ்சலி எனும் இளம்பெண் சாலை விபத்தில் கொடூரமான முறையில் உயிரிழந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது திட்டமிட்ட கொலை என்று அஞ்சலியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் புத்தாண்டு சிறபாக கொண்டாடப்பட்ட நிலையில், டெல்லியில் இக்கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிலையில் அடுத்த நாள் அதாவது ஜனவரி 2ம் தேதியன்று அடையாளம் தெரியாத சடலம் ஒன்று சாலையில் கிடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் டெல்லியை சேர்ந்த இளம் பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது கார் மோதியதில் இப்பெண் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் உட்பட 5 பேரை கைது செய்தனர். கார் ஓட்டுநர் தரப்பில், இளம்பெண் குடித்திருந்ததாகவும் போதையில் தன்னுடைய கார் மீது வந்து மோதியதாகவும் கூறியிருந்தார். ஆனால் அஞ்சலியின் குடும்பத்தினர் இதனை மறுத்தனர். மேலும், தன்னுடைய மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர்.

தோழி
இதற்கிடையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு செய்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அதற்கேற்றார் போல விசாரணை தீவிரமடைந்தது. மறுபுறம் உடல் பிசேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது விபத்து நடந்த இரவு அஞ்சலியுடன் அவரது தோழி நிதியும் பயணித்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.

சண்டை
ஆனால் நிதிக்கு ஒரேயொரு சின்ன கீறல் கூட விழவில்லை. இந்த கேள்ளி பல சந்தேகங்களை எழுப்பியது. அப்போதுதான் ஒரு முக்கியமான க்ளூ கிடைத்தது. அதாவது அஞ்சலியும் நிதியும் கடைசியாக ஒன்றாக இருந்த இடம் ஒரு ஹோட்டல். இதனை கண்டுபிடித்த காவல்துறையினர் ஹோட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நிதியும் அஞ்சலியும் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருந்ததாகவும் எனவே தான் சென்று அவர்கள் இருவரையும் விலக்கி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இருவருமே நல்ல போதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

12 கி.மீ
இதனையடுத்து ஹோட்டலிலிருந்து இருவரும் புறப்பட்டுள்ளனர். ஆனால் அங்கேயும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனை ஹோட்டல் உரிமையாளர் கவனித்திருக்கிறார். அதன் பின்னர் நிதியை அவளது வீட்டில் அஞ்சலி இறக்கிவிட்டதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் இறங்கி விட்டு கொஞ்சம் தூரம் வந்த நிலையில் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது. இது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் டெல்லியின் சுல்தான்புரியில் நடந்திருக்கிறது. அஞ்சலியின் பைக்கை இடித்த கார் நிற்காமல் சென்றுள்ளது. அதாது சுல்தான்புரியிலிருந்து சுமார் கஞ்சவாலா வரை என 12 கி.மீக்கு எங்கேயும் நிற்கவில்லை.

காயம்
இதில் சோகம் என்னவெனில் இந்த காரின் அடியில் அஞ்சலி சிக்கி இருந்திருக்கிறாள் என்பதுதான். அங்கிருந்து உயிருக்கு போராடியிருக்கிறாள். ஆனால் எல்லாம் ஒரு 2 நிமிடங்களில் முடிவுக்கு வந்திருக்கிறது. விசாரணையில் அஞ்சலி குடித்திருந்திருக்கிறாள் என்றுதான் நிதியும் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அஞ்சலி குடிக்கவில்லை என்பது தெளிவாகியிருந்தது. அதேபோல அவர் பாலியல் பலாத்காரத்திற்கும் உள்ளாகவில்லை என்றும் தெரிய வந்தது. மொத்தமாக அஞ்சலியின் உடலில் 40 காயங்கள் இருந்துள்ளன. அதில் 20-25 காயங்கள் வெறும் சிராய்ப்புகள்தான்.

குற்றச்சாட்டு
மீதமுள்ளவை அனைத்தும் ஆழமான காயங்கள். அஞ்சலி இறந்த பின்னரும் 10-15 காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. விபத்தில் அஞ்சலியின் விலா எலும்பு உடைந்திருக்கிறது. நுரையீரல் வெளியே வந்திருக்கிறது. மட்டுமல்லாது மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் காணவில்லை. இந்த சம்பவத்தையடுத்து அஞ்சலியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்நிலையில் பைக்கில் இருவர் பயணித்த நிலையில் ஒருவருக்கு மட்டும் எப்படி எவ்வித காயங்களும் ஏற்படாமல் இருக்கிறது? என்றும் இது திட்டமிட்ட கொலை என்றும் அஞ்சலியின் பெற்றோர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications