இன்னொரு லாக்டவுன்... பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்.. ராகுலுடனான உரையாடலில் ரகுராம் ராஜன் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா 2 -வது அல்லது 3-வது லாக்டவுன் ஒன்றை அமல்படுத்தினால் பொருளாதாரம் மிகப் பெரும் பேரழிவை சந்திக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் ஏற்படுத்தியிருக்கும், ஏற்படுத்த இருக்கும் விளைவுகள் தொடர்பாக ரகுராம் ராஜனுடன் இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஒரு செய்தியாளரைப் போல ராகுல் காந்தி கேள்விகளை கேட்டார்.

இந்த கேள்விகளுக்கு ரகுராம் ராஜன் அளித்த பதில்களின் தொகுப்பு:

Another lockdown will be devastating for India’s economy, warns Raghuram Rajan

கொரோனா வைரஸ் லாக்டவுன் போன்றவைகள் சர்வதேச பொருளாதாரம் குறித்த புதிய விவாதங்களை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் 2-வது அல்லது 3-வது லாக்டவுன் என்பது பொருளாதாரத்தில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும். அது சாத்தியமானதும் அல்ல.

லாக்டவுன் என்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்றதானது அல்ல. தற்போதைய நிலையில் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க சுமார் ரூ65,000 கோடி நிதி உதவி தேவைப்படுகிறது.

கொரோனா தாக்கத்தை இந்தியாவில் இருந்து 100% வெளியேற்ற முடியாது. அது சாத்தியமற்றது. நமது பரிசோதனை முறைகள் மிகவும் வேறுபட்டதாகவும் இருக்கிறது. இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

இதேபோல் பல்வேறு துறைசார் வல்லுநர்களுடன் ராகுல் காந்தி தொடர்ந்து விவாதம் நடத்த உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+