சிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் பலாத்காரம் செய்து கொலை செய்வர் என்று மேற்கு டெல்லி பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் களைகட்டியுள்ளது. இத் தேர்தலில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்கள் விவாதப் பொருளாகி உள்ளது.

இப்போராட்டங்களை சுட்டிக்காட்டிப் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் துரோகிகளை சுட்டுத் தள்ள வேண்டும் என்றார்.. இதையே பிரசாரத்தின் போது முழக்கமாக எழுப்புமாறு பொதுமக்களையும் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டது சர்ச்சையானது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மேற்கு டெல்லி பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்திருக்கும் கருத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக பர்வேஷ் வர்மா கூறியுள்ளதாவது:
டெல்லி தேர்தல் என்பது மிகச் சிறிய தேர்தல் அல்ல. இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டையும் நிலைத்தன்மையையும் வெளிப்படுத்துகிற தேர்தல். டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஒரு மணிநேரத்தில் ஷாகீன் பாக் பகுதியில் போராடுகிறவர்கள் ஒருவர் கூட அங்கே இருக்கமாட்டார்கள்.
டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் பிப்ரவரி 11-க்குப் பின்னர் ஒரே ஒரு மாதம் மட்டும் அவகாசம் கொடுங்கள்... என்னுடைய மேற்கு டெல்லி தொகுதியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட அனைத்து மசூதிகளையும் அகற்றுவேன். டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
டெல்லி மக்கள் இப்போது ஒரு முடிவு எடுக்க வேண்டிய தருணம். சி.ஏ.ஏ. போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்துவிடுவார்கள்.. உங்கள் சகோதரிகளை, குழந்தைகளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவார்கள். இன்றே முடிவெடுங்கள்.. நாளை உங்களை காப்பாற்ற மோடியும் அமித்ஷாவும் வரமாட்டார்கள். இவ்வாறு பர்வேஷ் வர்மா பேசியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications