பாஜக, காங்கிரசை தவிர இந்தியாவில் வேறு எந்த கட்சியும் 48 இடங்களுக்கு மேல் பெறாது.. ப சிதம்பரம்
டெல்லி: காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் 'ஹாம்லெட் இல்லாத பிரின்ஸ் ஆப் டென்மார்க்' என்பது போலவே இருக்கும் என்றும் பாஜக, காங்கிரசை தவிர இந்தியாவில் வேறு எந்த கட்சியும் 48 இடங்களுக்கு மேல் பெறுவது சாத்தியமில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஹாம்லெட் இல்லாத பிரின்ஸ் ஆப் டென்மார்க்'
வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

3-வது அணியை உருவாக்க
தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாத ஒரு 3-வது அணியை உருவாக்க இவர்கள் தீவிரம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபர்ப்பாக பேசப்பட்டது. தற்போது இந்தப் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் இணைந்துள்ளனர். கடந்த 3 தினங்களாக டெல்லியில் முகாமிட்டு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்து பேசிய நிதிஷ் குமார், காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை முயற்சிக்கவில்லை என்றார்.

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளால்
அரசியல் களத்தில் தினம் தினம் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்ற பொருளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

48 இடங்களுக்கு மேல்..
அரசியல் தலைவர்களின் முயற்சி வரவேற்கப்படுகிறது. ஆனால் பாஜக, காங்கிரசை தவிர இந்தியாவில் வேறு எந்த ஒரு கட்சியும் 48 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று நம்ப முடியாது. இதர கட்சிகள் அனைத்துமே ஒரு மாநில கட்சிகள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

ஹாம்லெட் இல்லாத பிரின்ஸ் ஆப் டென்மார்க்
மேலும் சிதம்பரம் கூறுகையில், ''எதிர்க்கட்சிகளில் அதிகப்படியான இடங்களில் திறன் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் 'ஹாம்லெட் இல்லாத பிரின்ஸ் ஆப் டென்மார்க்' என்பது போலவே இருக்கும்'' என்றார். ஷேக்ஷ்பியரின் கதைகளில் இடம் பெற்றிருக்கும் ஹாம்லேட் என்ற பிரபலமான கதாப்பாத்திரத்தை மேற்கோள் காட்டி ப.சிதம்பரம் இவ்வாறு கூறினார்.

ஒற்றுமையின் அவசியம்
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். கன்னியாகுமரியில் இந்த நடைபயணத்தை நேற்று தொடங்கினார். இது குறித்து ப.சிதம்பரம் கூறுகையில், 'இந்த பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நாடு பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் முயற்சி இதுவாகும். அதேபோல் ஒற்றுமையின் அவசியத்தையும் உணர்த்துகிறது" என்றார்












Click it and Unblock the Notifications