இவிஎம் - விவிபேட் வழக்கில்.. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
டெல்லி: பதிவான வாக்குகளுடன் 100% ஒப்புகளை சீட்டுகளை எண்ணக் கோரிய மனுக்களை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தல்கள் அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாகதான் நடைபெறுகிறது. தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று வரை 4 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். மட்டுமல்லாது தேர்தலின் போது எந்த கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் ஒப்புகை சீட்டை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், இந்த சீட்டுக்கள் பதிவான வாக்குகளுடன் எண்ணப்படுவதில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன.
விவிபேட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் 5-6 மணி நேரத்தில் பணியை முடித்துவிடலாம். 24 லட்சம் விவிபேட் இயந்திரங்களை வாங்க அரசு ரூ.5000 கோடியை செலவழித்துள்ளது. ஆனால் தற்போது வரையில் வெறும் 20,000 விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 5 சதவிகிதம்தான் வழக்கில் வாதங்கள் வைக்கப்பட்டிருந்தன.
எனவே பதிவான வாக்குகளுடன் 100% ஒப்புகளை சீட்டுகளை எண்ணக் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதிகள் கூறினர்.
இருப்பினும் சில முக்கிய உத்தரவுகளையும் தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்டடிருந்தனர். அதாவது வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
விரிவாக சொல்வதெனில், மின்னணு வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும்.
இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பதிவான வாக்குகளுடன் 100% ஒப்புகளை சீட்டுகளை எண்ணக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அருண்குமார் அகர்வால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications