அடிபொலி.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த ஆப்பிள் சிஇஓ.. நாடு முழுவதும் முதலீடு செய்வதாக அறிவிப்பு
டெல்லி: உலகின் நம்பர் 1 ஸ்மார்ட் போனான ஐபோனை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக், இந்தியா வந்து இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி உள்ளார்.
உலகின் விலை உயர்ந்த மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளை கொண்ட தொழில்நுட்ப கருவிகளை வெளியிடும் நிறுவனம் என்றால் அது ஆப்பிள்தான். ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐபோன்களையே விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பெரும் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.

நடுத்தர ஏழை மக்களுக்கும் ஆப்பிள் போனை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற கனவு இருக்கும். அதேபோல் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் கணினி, மற்றும் லேப்டாப்பான மேக், ஐபாட் டேப், ஐ வாட்ச், ஏர் பாட் போன்றவையும் பலரால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் ஆப்பிள் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றின் விலை லட்சங்களை தொட்டுவிட்டாலும் அதன் தரம் காரணமாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகளில் ஆப்பிள் நிறுவத்தின் ஸ்டோர்கள் அதிகளவில் உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் முதல் ஆப்பிள் ஸ்டோர் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்த ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இதனை திறந்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நாளை தலைநகர் டெல்லியில் சாகெட் செலெக்ட் சிட்டியில் மாலை திறந்து வைக்க இருக்கிறார். இதற்கிடையே இன்று ஆப்பிள் சிஇஒ டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அத்துடன் மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்னவையும் அவர் சந்தித்து பேசி உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ட்ம் குக், "தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் நேர்மறையான தாக்கம் குறித்து உங்களின் பார்வையை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். கல்வி, டெவலப்பர்கள் முதல் உற்பத்தி, சுற்றூச்சூழல் வரை நாடு முழுவதும் நாங்கள் வளர முதலீடு செய்ய இருக்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications