க்ளு கிடைச்சுடுச்சே! குடியரசுத் தலைவர் வேட்பாளராகும் சரத் பவார்? ஸ்டாலினுக்கு வந்த போன்.. ட்விஸ்ட்!
டெல்லி: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில், இந்த முறை பாஜக கூட்டணிக்கு எம்பி, எம்எல்ஏ எல்லாம் சேர்த்து 5.42 லட்சம் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் திமுக, காங்கிரஸ் எல்லாம் சேர்த்து 4.49 லட்சம் வாக்குகள் கொண்டு உள்ளன.
இந்த தேர்தலில் மொத்தம் 10.82 லட்சம் வாக்குகள் உள்ளன. ஒரு எம்பிக்கு 700 வாக்குகள் உள்ளன. இந்த தேர்தலில் 51 சதவிகித வாக்குகள், அல்லது அதற்கு கூடுதலாக வாக்குகள் பெறும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

ஜனாதிபதி
இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஜூலை 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த முறை பாஜகவிற்கு பெரும்பான்மை பெற 13 ஆயிரம் வாக்குகள் குறைவாக உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை வெற்றிபெற வைக்க பாஜக முயன்று வருகிறது.

ஜெகன் மோகன்
அதாவது ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் போன்ற மாநில முதல்வர்களை தங்கள் பக்கம் இழுத்து அவர்களின் ஆதரவோடு எப்படியவது தங்கள் வேட்பாளரை வெற்றிபெற வைக்க பாஜக முயன்று வருகிறது. திமுகவின் ஆதரவையும் பாஜக கேட்க முயற்சிக்கும் என்கிறார்கள். பாஜக சார்பாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரின் பெயர்கள் அடிபட்டாலும் இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

சரத் பவார்
ஒரு பக்கம் பாஜக தனது குடியரசுத் வேட்பாளரை தேர்வு செய்வதில் திணறி வரும் நிலையில், இன்னொரு பக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் குழம்பி வருகின்றன. எதிர்கட்சிளில் மமதா பானர்ஜி ஒரு பக்கம் செல்கிறார்... சோனியா ஒரு பக்கம் செல்கிறார்.. திமுக குழப்பமான சிக்னலை கொடுக்கிறது என்பதால் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன.

ஒற்றுமை
ஒற்றுமையாக எல்லோரும் ஒரு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று சோனியா அழைப்பு விடுத்துள்ளார். வரும் 16ம் தேதி மீட்டிங் நடத்த பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு மம்தா பானர்ஜியும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த கூட்டத்தில் சுமுகமாக முடிவு எட்டப்படுமா.. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு குடைக்குள் வருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த குழப்பமான நிலையில்தான் எதிர்க்கட்சிகள் சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

சோனியா பிளான்
கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சரத் பவரை சந்தித்தார். இந்த சந்திப்பில் சரத் பவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்க காங்கிரஸ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அவரிடம் இதை பற்றி கார்கே நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. சோனியா காந்தியிடம் இருந்து இதற்கான மெசேஜ் சரத் பவாரிடம் கார்கே மூலம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

கார்கே போன் கால்
சரத் பவாரை சந்தித்த கார்கே அதன்பின் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உத்தவ் தாக்கரேவிற்கும் போன் செய்து பேசி இருக்கிறார். இதில் சரத் பவாரை பொது எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. சரத் பவாரை ஆதரிப்பது தொடர்பாக இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று இந்த போன் கால் சமயத்தில்தான் திமுக மீட்டிங் நடத்தப்பட்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன நிலைப்பாடு
இதன்பின் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் நேற்று சரத் பவாருடன் போனில் பேசினார். இந்த உரையாடலில் இதை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் உடன் நெருக்கத்தில் இல்லை. ஆனால் சரத் பவரை வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி ஒரு கூடைக்கு கீழ் வரும் வாய்ப்புகள் உள்ளன. சரத் பவார் பொதுவாக கூட்டணிகளை உருவாக்குவதில் வல்லவர்.












Click it and Unblock the Notifications