குஜராத்தில் வெளியாகும் அறிவிப்புகள் இலவசத்தில் சேராதா? மோடிக்கு சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்வி
டெல்லி: வேலைவாய்ப்பு இன்மை அதிகரிப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் மக்கள் யாரும் கொண்டாட்டத்தில் இல்லை என்றும், குஜராத்தில் வெளியாகும் அறிவிப்புகள் இலவசத்தில் சேராதா என்றும் மோடிக்கு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி சமீப காலமாக இலவச திட்டங்களுக்கு எதிராக பேசி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதை தடுப்பதாகவும் நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிக்கப்பதாகவும் கூறியிருந்தார்.
அதேபோல், நேற்று பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மக்கள் வேதனை அடைகின்றனர்
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெறுவதற்காக இலவசங்களை அறிவிக்கும் கலாசாரத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். பிரதமர் மோடி கூறுகையில், ''தங்களின் வரிப்பணம் சரியான முறையில் செலவிடப்பட வேண்டும் என்று வரி செலுத்துபவர்கள் விரும்புகின்றனர். ஆனால், இலவசங்களுக்காக தங்கள் வரிப்பணம் செலவிடப்படுவதை கண்டு வரி செலுத்தும் மக்கள் வேதனை அடைகின்றனர்'' என்று தெரிவித்து இருந்தனர்.

ப சிதம்பரம் விமர்சனம்
எனினும், நலத்திட்ட உதவிகளையும் இலவசங்களுக்கும் உள்ள வேறுபாடு குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில், இலவச கலாசாரங்களுக்காக எதிராக பேசிவிட்டு குஜராத் தேர்தலை மனதில் கொண்டு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என பாஜக அறிவித்தை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-

இரண்டு சிலிண்டர்கள் இலவசம் ஏன்
இலவசங்களுக்காக பணம் வீணடிக்கப்படுவதாக வரி செலுத்துபவர்கள் வேதனை அடைவதாக மாண்புமிகு பிரதமர் தெரிவித்தார். நன்றாக சொன்னீர்கள்.. அதேவேளையில், குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இரண்டு எல்.பி.ஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது இலவசத்தில் சேராது என்பதையும் சேர்த்து பிரதமர் மோடி கூறியிருக்க வேண்டும்.

கடனை தள்ளுபடி செய்ததும்..
அதேபோல், 517 நிறுவனங்களின் 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ததும் இலவசத்தில் வராது என்பதையும் சேர்த்து சொல்லி இருக்க வேண்டும். இதேபோன்ற பல உதாரணங்களை பிரதமர் மோடி சொல்லியிருக்க முடியும். சொல்லியிருக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

யாரும் கொண்டாட்டத்தில் இல்லை
அதேபோல ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது;- இது கொண்டாட்டத்திற்கும் மனநிறைவுக்குமான நேரம் கிடையாது என்று பொருளாதார நிலை குறித்து நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை நிதி அமைச்சருக்கு விடுக்கப்பட்டதா? அல்லது பிரதமருக்கு நிதி அமைச்சரால் விடுக்கப்பட்டதா? மக்களுக்கு இந்த எச்சரிக்கை தேவையில்லை. ஏனெனில், வேலைவாய்ப்பு இன்மை அதிகரிப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் யாரும் கொண்டாட்டத்தில் இல்லை.

கடந்த 8 ஆண்டுகளாக ஏன் நிரப்பப் படவில்லை
வேலை தேடிய 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியது வரவேற்புக்குரியது. ஆனால், 10 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை நினைவு கொள்ள வேண்டும். தற்போது எழும் கேள்வி என்னவென்றால், ஏன் கடந்த 8 ஆண்டுகளாக இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. காலிப்பணியிடங்கள் குறித்தோ அதை நிரப்புவது குறித்தோ அரசு ஏன் வாய் திறக்கவில்லை.

2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதி
பிரதமர் மோடியின் 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதிக்கு மத்தியில் 75 ஆயிரம் நியமனங்கள்தான் செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவு கொள்ள வேண்டும். புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 75 ஆயிரம் பேருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்!'' என்று பதிவிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications