20 நிமிடம் ஒத்தைக்கு ஒத்த பேச ரெடியா?.. மோடிக்கு சவால் விடும் ராகுல் காந்தி!
ரபேல் ஒப்பந்தம் குறித்து 20 நிமிடம் தன்னிடம் விவாதம் நடத்த தயாரா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்து 20 நிமிடம் தன்னிடம் விவாதம் நடத்த தயாரா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ரபேல் ஊழல் குறித்து பேசியதுதான் தற்போது வைரல் ஹிட். தொடர்ந்து சிறப்பாக பேசி வரும் ராகுல் காந்தி, நேற்று நாடாளுமன்றத்தில் ரபேல் குறித்து காரசாரமாக பேசினார்.
பிரதமர் மோடி தொடங்கி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன், அதிமுக எம்.பிக்கள் வரை எல்லோரையும் கேள்விகள் மூலம் திணற வைத்தார். இந்த நிலையில் இந்த நாடாளுமன்ற பேச்சுக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும் அவர் பிரதமர் மேல் சரமாரி குற்றச்சாட்டு வைத்தார்.

உடனே நடத்த வேண்டும்
ராகுல் காந்தி தனது பேட்டியில், ரபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் எங்குமே கூறவில்லை. இதை நாங்கள் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் கூறியுள்ளனர். அதனால் இதை பாராளுமன்ற கூட்டுக்குழு கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியே வந்துவிடும்.

அவர் பெயர்
பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில் இரண்டு பெயர்கள் மட்டும்தான் வெளியே வரும். ஒன்று அனில் அம்பானி பெயர். இன்னொன்று பிரதமர் மோடியின் பெயர். இவர்கள் இருவரும்தான் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். விசாரணையில் இது தெரிய வரும்.

மோடி விவாதம்
ரபேல் ஊழல் குறித்து 20 நிமிடம் என்னிடம் விவாதம் நடத்த மோடி தயாரா? நேருக்கு நேர் விவாதம் நடத்தலாம். 20 நிமிடம் மட்டும் பேசுவோம். மோடி தன் மீது தவறு இல்லை என்றால் பேசட்டும். விவாதம் செய்து பார்க்கலாம் யார் மீது தவறு இருக்கிறது என்று. ஆனால் மோடி பேசுவதற்கு வர மாட்டார்.

பாஜக வாதம்
பாஜகவால் ரபேல் ஊழல் குறித்து சரியான வாதங்களை வைக்க முடியாது. அமைச்சர் அருண் ஜேட்லி சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார். பிரதமர் மோடி இதை பற்றி ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசுவது கிடையாது. பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில் எல்லா உண்மைகளும் வெளியே வரும் என்பதில் எங்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications