கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்களுக்கு முப்படைகள் மரியாதை.. சற்று நேரத்தில் ராயல் சல்யூட்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் முப்படைகள் சார்பாக இன்று போர்விமானங்கள் பறக்கவிடப்படுவதுடன் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்படவுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் இந்த நிகழ்வு தொடங்க உள்ளது.
இது தொடர்பாக ராணுவம், கடற்படை, விமானப்படை சார்பில் இன்று மேற்கொள்ள உள்ள நிகழ்ச்சிகளின் விவரம் பின்வருமாறு;

- இன்று காலை டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகு கொரோனா வீரர்களுக்கு நன்றி செலுத்துதல் நிகழ்ச்சி முப்படைகள் சார்பாக தொடங்குகிறது. 10 மணிக்கு நடக்க வேண்டிய இந்த நிகழ்வு மழை காரணமாக 11 மணி வரை தள்ளி போகிறது.
- 11 மணிக்கு போர் நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படுகின்றன. அதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்படும்.
- நாடு முழுக்க 10-11 மணிக்குள் இந்தியா விமானப்படை சார்பில் போர்விமானங்கள் பறக்கவிடப்படுகின்றன. பல்வேறு முக்கிய நகரங்களை உள்ளடக்கிய வகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- போர் விமானங்கள் காஷ்மீர் முதல் திருவனந்தபுரம் வரை (வடக்கு முதல் தெற்கு) மற்றும் திப்ருகர் முதல் கட்ச் வரை(கிழக்கு முதல் மேற்கு) அனைத்துப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் பறக்கவிடப்படுகின்றன.
- கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனைகள் மீது இந்திய விமானப்படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் வட்டமடிக்க உள்ளன.
- டெல்லியை பொறுத்தவரை சப்தர்ஜங் மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை, தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனை, பாபா சாஹிப் அம்பேத்கர் மருத்துவமனை, மற்றும் ராணுவ மருத்துவமனை மீது இந்த ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து மருத்துவர்களுக்கு சல்யூட் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மேலும், இந்தியா முழுவதும் 5 இடங்களில் கொரோனா சிகிச்சைபிரிவு உள்ள மருத்துவமனைகள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- சுகோய் 30, ஜாகுவார் மற்றும் மிக் 29 ரக போர் விமானங்கள் டெல்லியில் உள்ள ராஜபாதை மீது பறக்கவிடப்படுவதுடன் டெல்லி நகரம் முழுவதும் வட்டமடிக்கும்.
- இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் அவைகள் அனைத்தும் 500 மீட்டர் உயரத்தில் பறக்கவிடப்படுவது.

- நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை தரப்படும் மாநகராட்சி மருத்துவமனைகள் முன்பாக ராணுவத்தினர் தேசபக்தியை பறைசாற்றும் வகையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்கி மருத்துவப் பணியாளர்களுக்கு இசையால் நன்றி செலுத்த உள்ளனர்.
- நாடு முழுவதும் 25 இடங்களில் 7,516 கி.மீ. கடற்பரப்பை உள்ளடக்கிய பகுதியில் கப்பற்படைக்கு சொந்தமான 46 போர்க்கப்பல்கள் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக ஒலி( சைரன்)எழுப்பும்.
- மும்பை கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் கடற்படைக்கு சொந்தமான 5 கப்பல்கள் நிறுத்தப்பட்டு இன்று இரவு 7.30 மணி முதல் 11.59 வரை வண்ண விளக்குகள் மிளிர விடப்படும்.
இதே போல் ஆந்திர மாநில விசாகப்பட்டிணத்தில் கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களை நிறுத்தி இன்று இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு வரை வண்ண விளக்குகளால் மிளிரவிடப்படவுள்ளன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications