"பிளாக் ஷீப்.." பாகிஸ்தானுக்கு பறந்த உளவு தகவல்கள்! ராணுவத்தில் இருந்த கருப்பு ஆடு! சிக்கியது எப்படி
அவர் பாகிஸ்தானுக்குக் கொடுத்த ராணுவ ரகசியங்களை வைத்து அந்நாடு என்னென்ன சதித்திட்டங்களைத் தீட்டும், அவற்றை முறியடிக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: இந்தியாவின் மிக முக்கியமான ராணுவ ரகசியங்களை ரூ.15 ஆயிரத்துக்காக பாகிஸ்தானிடம் விற்ற ராணுவ சலவைத் தொழிலாளி கையும் களவுமாகப் பிடிபட்டார்.
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நமது ராணுவ வீரர்கள் இரவும் பகலாக எல்லையில் காவல் இருந்து வருகிறார்கள். தங்கள் உயிரையும், குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் காவல் இருப்பதால்தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.
ஆனால், ஒவ்வொரு துறையிலும் கறுப்பு ஆடுகள் இருப்பதைப் போல ராணுவத்திலும் சில களைகள் இருக்கவே செய்கின்றன. இதுபோன்ற புல்லுருவிகள்தான் ராணுவ ரகசியங்களை எதிரிகளிடம் விற்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்படியொரு கறுப்பு ஆடு தான் தற்போது சிக்கியுள்ளது.

அடிக்கடி விடுப்பு
இந்திய ராணுவத்தில் சலவைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் ஆலிம் கான் (42). இவர் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இதனிடையே, சமீபகாலமாக இவர் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்திருக்கிறார். மேலும், இவரது நடவடிக்கைகளிலும் சில மாற்றங்கள் தென்பட்டன. இதையடுத்து, அவரை ராணுவ உளவுத்துறையினர் ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினர்.

அதிர்ந்த உளவுத்துறை
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இதுபோல விடுப்பு எடுத்த ஆலிம் கான், சிடிக்கள், பென் டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து சென்றிருக்கிறார். அவரை உளவுத்துறையினர் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது, அங்கு காரில் வந்த ஒருவரிடம் அந்த பொருட்களை ஆலிம் கான் கொடுத்தார். பின்னர் ஏதும் நடக்காதது போல ராணுவ முகாமுக்கு வந்து பணியை தொடர்ந்தார். இதையடுத்து, ஆலிம்கானை பிடித்த ராணுவ உளவுத்துறையினர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

ஐஎஸ்ஐ உளவாளியிடம்..
அப்போது, ராணுவ ரகசியங்களைச் சேகரித்து பாகிஸ்தான் உளவாளியிடம் கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை சேர்ந்த உளவு அதிகாரி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிவதாகவும், அவரிடம்தான் இந்த ஆவணங்களைக் கொடுத்து வந்ததாகவும் அவர் கூறினார். மேலும், இவ்வாறு ராணுவ ரகசியங்களைக் கொடுப்பதற்கு ரூ.15,000 பணம் அவர் தந்ததாகவும் ஆலிம் கான் வாக்குமூலம் அளித்தார்.

ராணுவ நீதிமன்றம் விசாரணை
இதன்பேரில், பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள ஐஎஸ்ஐ அதிகாரியை மத்திய அரசு பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பியது. இந்நிலையில், ஆலிம் கான் இதுவரை கொடுத்த ராணுவ ரகசியங்கள் என்னென்ன என்ற விவரங்களை ராணுவத்தினர் கேட்டறிந்தனர். இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து ராணுவ நீதிமன்றம் தனது விசாரணையைத் தொடங்கியிருப்பதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் பாகிஸ்தானுக்குக் கொடுத்த ராணுவ ரகசியங்களை வைத்து அந்நாடு என்னென்ன சதித்திட்டங்களைத் தீட்டும், அவற்றை முறியடிக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications