டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

காய்ச்சல், இருமலால் அவதிப்பட்ட கெஜ்ரிவால் தம்மை தாமே தனிமைப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் பார்வையாளர்களை சந்திப்பதையும் கெஜ்ரிவால் தவிர்த்தும் வந்தார்.
இதனையடுத்து கெஜ்ரிவாலுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
மேலும் டெல்லியில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டதோ என்கிற அச்சம் இருந்தது. ஆனால் டெல்லி மாநில அரசு இதனை திடவட்டமாக மறுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications