டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3-வது முறையாக டெல்லி முதல்வராக பிப்.16-ல் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    The Unknown show with Anandhan Irfath | டெல்லி தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி

    டெல்லி: டெல்லி முதல்வராக 3-வது முறையாக பிப்ரவரி 16-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. பாஜகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    Arvind Kejriwal to take oath as Delhi CM on Feb.16

    இதனைத் தொடர்ந்து இன்று டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜலை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 16-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் கெஜ்ரிவால் அமைச்சரவையும் அதே நாளில் பதவியேற்கிறது.

    தற்போதைய டெல்லி தேர்தலில் 16 பேர் முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள். இவர்கள் அனைவருமே ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். இப்புது முகங்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்பிருக்கிறது.

    English summary
    Arvind Kejriwal to take oath as the Delhi Chief Minister for the third time on February 16 at Ramlila Maidan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X