டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க சதி! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரம் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவலை நீட்டிப்பது குறித்த உத்தரவை நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.

இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒரே ஒரு சம்மனுக்கு கூட பதிலளிக்கவில்லை. நேரில் ஆஜரானால் கைது உறுதி என்பது தெரிந்த விஷயம்தான். எனவே, ஆஜராவதை தவிர்த்து வந்தார்.
அதே நேரம், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார். அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்ப தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து இன்று புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனையடுத்து கடந்த 21ம் தேதி கையில் கைது வாரண்ட்டுடன் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். இறுதியாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை போன்று கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தினர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கெஜ்ரிவால், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்கில், சிபிஐ 31,000 பக்கங்கள், ED 25,000 பங்கங்களில் என் மீதான குற்றச்சாட்டை தாக்கல் செய்திருக்கின்றன. இதுவரை எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை. இருப்பினும் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். வெறுமென 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.
அமலாக்கத்துறை, ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே என்னை கைது செய்திருக்கிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் பாடம் புகட்டுவார்கள். மதுபான கொள்கை வழக்கில் என்னை வேண்டுமென்ற அமலாக்கத்துறை சிக்க வைத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, "கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்ட்களை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும். எனவே மேலும் 7 நாட்கள் விசாரணை காவலுக்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளனர். அமலாக்கத்துறையின் கோரிக்கை மீதான உத்தரவை நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.
முன்னதாக நீதிமன்றத்தில் தனது கணவர் ஆஜராகும் போது முக்கிய உண்மைகளை தெரியப்படுத்துவார் என்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறியிருந்து பெரும் கவனம் பெற்றிருந்தது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications