"கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார்.. சிறையில் இருந்து உத்தரவுகள் வரும்!" ஆம் ஆத்மி திட்டவட்டம்
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும் அவர் தனது பதவியை நிச்சயம் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் அவர் சிறையில் இருந்தபடியே அரசை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இப்போது சிறையில் இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.

முதலில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.. மேலும் 'மெயின் பி கேஜ்ரிவால்' அதாவது நானும் கெஜ்ரிவாலும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.
ஆலோசனை: நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தக் கூட்டம் ஆம் ஆத்மியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய கூட்டமாகப் பார்க்கப்பட்டது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து ஆம் ஆத்மி சார்பில் நடந்த முதல் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் சந்தீப் பதக் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
ராஜினாமா செய்ய மாட்டார்: இதில் தான் முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார் என்று முடிவெடுக்கப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் சிறையில் இருந்து கெஜ்ரிவால் பிறப்பிக்கும் உத்தரவைப் பெறுவார்கள் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், நானும் கெஜ்ரிவாலும் என்ற பிரச்சாரத்தை விரைவில் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கெஜ்ரிவால் கைதை கண்டித்து வரும் மார்ச் 31இல் இந்தியா கூட்டணி போராட்டத்தை நடத்தும் நிலையில், அவர்களும் இந்த நானும் கெஜ்ரிவாலும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என சந்தீப் பதக் கேட்டுக் கொண்டார். மார்ச் இறுதியில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வதை உறுதி செய்யவும் இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தியா கூட்டணி: தொடர்ந்து பேசிய சந்தீப் பதக், "டெல்லியில் சுமார் 14,000 சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சாவடியிலிருந்தும் 10 பேர் வந்தாலே ராம்லீலா மைதானத்திற்கு வருவோரின் எண்ணிக்கை 1.5 லட்சமாக இருக்கும்.. மார்ச் 31இல் இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் கைகளில் கருப்பு ரிப்பன் கட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் ஆம் ஆத்மியில் உள்ள அனைத்து தொண்டர்கள் சார்பாக கெஜ்ரிவாலை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். டெல்லி அரசு சிறையிலிருந்து தொடர்ந்து இயங்கும். கெஜ்ரிவாலைக் கைது செய்து ஆம் ஆத்மியை உடைப்பது தான் பாஜகவின் சதி.. ஆனால், அவர்கள் ஆசை நிறைவேறாது கட்சியில் இருந்து யாரும் பிரிந்து செல்லப் போவதில்லை.
ரொம்பவே ஆபத்தான நபர்: சிறையில் இருக்கும் கெஜ்ரிவால்,வெளியே இருந்த கெஜ்ரிவாலை விட ஆபத்தானவர், உங்களுக்கு (பாஜக) அவரை பற்றி முழுமையாகத் தெரியாது. இனிமேல் அனுசரித்துப் போவது எல்லாம் இல்லை. இனி முழுவீச்சில் போர் தான்.
முன்பு, நாங்கள் டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆர்டர்களைப் பெறுவோம், இப்போது சிறையில் இருந்து உத்தரவுகளைப் பெறுவோம். முன்பு போல சிறையில் இருந்து வரும் உத்தரவுகளையும் நிச்சயம் பின்பற்றுவோம்.. கெஜ்ரிவால் இவ்வளவு காலம் ஆட்சி செய்வதில் பிஸியாக இருந்தார். அப்போதே அவர் பாஜகவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தார். இப்போது சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். இப்போது அவர் பாஜகவை என்ன செய்வார்கள் என யோசித்துப் பாருங்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.
கெஜ்ரிவால்: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த வியாழக்கிழமை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் மார்ச் 28 வரை அவரை அமலாக்கத் துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications