ஆர்யன் கான் வழக்கு.. போதிய ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தில் திணறிய என்சிபி.. வெளியான ஐகோர்ட் தீர்ப்பு
டெல்லி: போதைப்பொருள் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அக். 28ஆம் தேதி ஆர்யன் கான் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த ஜாமீன் தொடர்பான உத்தரவு நேற்று வெளியாகியுள்ளது.
கடந்த அக். 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவதைக் கண்டறிந்த என்சிபி அதிகாரிகள் இது தொடர்பாகப் பலரைக் கைது செய்தனர்.
இதில் குறிப்பாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானை கப்பலில் வைத்து கைது செய்தது என்சிபி. முதலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்..

ஜாமீன்
முதலில் ஜாமீன் கோரி அவர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சாட்கள் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் உள்ளதால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றம் அக். 28ஆம் தேதி ஆர்யன் கான் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த ஜாமீன் தொடர்பான உத்தரவு நேற்று வெளியானது.

போதிய ஆதாரம் இல்லை
கோர்டெலியா சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் பார்ட்டியில் ஆர்யன் கான் உட்பட மூவரும் கலந்துக்கொள்ளத் திட்டமிட்டுச் சென்றனர் என்பதே என்சிபி அமைப்பின் வழக்காகும். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் என்சிபி அமைப்பிடம் இல்லை. எனவே, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைச் செய்ய மூவரும் திட்டமிட்டனர் என்பதை நம்புவதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைத்து தரப்பினரின் வழக்கையும் ஒன்றாகப் பரிசீலிக்க வேண்டும் என்ற என்சிபி வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.

வாட்ஸ்அப் சாட்கள்
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையேயான வாட்ஸ்அப் சாட்கள் அவர்கள் போதைப்பொருள் பார்ட்டிக்கு செல்ல திட்டமிட்டதைக் காட்டுவதாக என்சிபி குற்றஞ்சாட்டியது. இருப்பினும், அதில் ஆட்சேபனைக்குரியது எதுவுமில்லை என்றும் அவர்கள் சேர்ந்து அங்குச் செல்ல திட்டமிட்டார்கள் என்பதை நிரூபிக்க இந்த ஆதாரம் போதுமானதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிரூபிக்க முடியவில்லை
ஆர்யன் கானுக்கு எதிரான வழக்கில், வாட்ஸ்அப் சாட்களை தவிர என்சிபி அதிகாரிகளிடம் வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆர்யன் கான் போதைப்பொருளை எடுத்துக்கொண்டார் என நிரூபிக்க என்சிபி அமைப்பால் முடியவில்லை. மூவர் மீதும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல், மற்றும் சட்டவிரோதமாகக் கடத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
மற்ற இருவரிடம் இருந்தும் போதைப் பொருள் கண்டறியப்பட்டது. இருப்பினும், மிகக் குறைவான அளவு போதைப் பொருளே கண்டறியப்பட்டதால், இது குறித்து நீதிபதி கூறுகையில், "இதுபோன்ற வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒரு சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்ப நிரூபிக்க வேண்டியதும் சரியான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்வதும் என்சிபி பணியாகும்" என்றார்.

ஆர்யன் கான் வாக்குமூலம்
NDPS சட்டப்பிரிவு 67இன் கீழ் ஆர்யன் கானிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் விசாரணைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் இதை வைத்துக் கொண்டு அவர் குற்றம் செய்ததாக அனுமானம் செய்ய முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தண்டனை என்ன
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே 25 நாட்கள் சிறையில் இருந்துள்ளனர் என்றும் அவர்கள் போதைப்பொருளை உட்கொண்டனரா என்பதைக் கண்டறிய என்சிபி அதிகாரிகள் சோதனை கூட நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், அரசு இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முனைப்புக் காட்டினாலும் அதிகபட்சமாக இந்த வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை மட்டுமே வழங்க முடியும் என நீதிபதி குறிப்பிட்டார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications