சீன எல்லையில் அல்ல, டெல்லியில்தான் பிரச்சினை: ஓவைசி குற்றச்சாட்டு! நாடாளுமன்ற விவாதம் நடத்த கோரிக்கை
டெல்லி: சீனா-இந்தியா உறவுகள் குறித்து முழு நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதின் ஓவைசி தெரிவித்தார்.
அமெரிக்க காங்கிரசுக்கு பென்டகன் அளித்த அறிக்கையில், அருணாச்சல பிரதேசத்தில், சீனா ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு இவ்வாறான ஆக்கிரமிப்புகள் குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை. இந்த நிலையில், ஓவைசி வரிசையாக ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டம்
ஓவைசி தனது ட்விட்டர் பதிவில், "சீனா-இந்திய உறவுகள் மற்றும் எல்லையில் உள்ள விவகாரங்கள் குறித்து முழு நாடாளுமன்ற விவாதத்தை நாங்கள் கோருகிறோம். அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவை அனைத்து சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். நமது இறையாண்மையை மீண்டும் நிலைநாட்டவும், பொதுமக்களுக்குத் தெரிவிக்கவும் இது வாய்ப்பை ஏற்படுத்தும்." என்று தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு ஆதாயம்
அவர் மேலும் தனது ட்வீட்டில், "தேவைப்பட்டால், மக்களவை விதி 248 இன் கீழ் சபையின் ரகசிய கூட்டத்தை நடத்தலாம்" என்றும், "பிரதமர் மோடியின் மௌனம், மறுப்பு போன்ற வியூகம் இந்தியாவிற்குத்தான் பின்னடைவை ஏற்படுத்துகிறது. நமது நாடு பலவீனமாக இருப்பதை போன்ற தகவல், சீனாவிற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. உண்மையை எதிர்கொள்ள நமது இயலாமையை இது உணர்த்துகிறது." என்று தெரிவித்துள்ளார் ஓவைசி.

மக்கள் பிரிவினை
துரதிர்ஷ்டவசமாக இந்த அரசு இந்தியர்களை பிரித்து வைப்பதன் மூலம் உள்நாட்டில் நம்மை பலவீனப்படுத்துகிறது. உள்நாட்டின் இந்த பிளவு, அண்டை நாடுகளுடன் நமது பகையை அதிகரிக்க செய்து விடுகிறது. இதை சீனா பயன்படுத்திக் கொள்கிறது.

டெல்லியில்தான் பிரச்சினை
2014க்கு முன்பு, எல்லையில் பிரச்சனை இல்லை, டெல்லியில் தான் பிரச்சனை என்று பிரதமர் மோடி கூறி வந்தார். முன்னெப்போதையும் விட இப்போதுதான் அந்த வார்த்தை சரியாக பொருந்திப் போகிறது. முதல்வராக இருந்தபோது மோடி தேசிய பாதுகாப்பு பற்றி பெரிதாக பேசுவார் ஆனால் இப்போது பிரதமராக உள்ள மோடி சீனாவின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. என்ன நடந்தது? ஏன் இந்தத் தயக்கம்? இவ்வாறு ஓவைசி ட்விட்டரில் கேள்விகள் எழுப்பியுள்ளார்.
-
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்












Click it and Unblock the Notifications