முந்தைய ஆண்டை விட.. 2024ல் இந்தியாவின் வளர்ச்சி குறைவாகதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
டெல்லி: முந்தைய ஆண்டை விட அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறைவாகதான் இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டில் நாடு 7.0% மற்றும் 7.6% என வளர்ச்சியை கண்டிருந்தது. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 7.0% மற்றும் 7.2% என்கிற அளவில்தான் இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்திருக்கிறது.

நேற்று 'ஜஏசியன் டெவலப்மென்ட் அவுட்லுக்' எனும் அறிக்கையை வங்கி வெளியிட்டிருந்தது. அதில்தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2024ம் ஆண்டை பொறுத்த அளவில் வளர்ச்சி என்பது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அதிக மூலதனச் செலவு, தனியார் நிறுவன முதலீட்டின் அதிகரிப்பு, வலுவான சேவைத் துறை செயல்திறன் மற்றும் மேம்பட்ட நுகர்வோர் நம்பிக்கை ஆகியவற்றின் மூலமாகதான் சாத்தியமாகும்.
இதே 2025ல் வளர்ச்சி என்பது, ஏற்றுமதி, உற்பத்தி திறன் அதிகரிப்பு, வேளாண் உற்பத்தி ஆகியவை மூலம்தான் சாத்தியமாகும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
2023-2024 ஆண்டை எடுத்துக்கொண்டால், ஏப்ரல்-ஜூன் மற்றும் ஜூலை-செப்டம்பர் ஆகிய இரண்டு காலாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீதம் மற்றும் 7.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 8.4 சதவீதமாக வளர்ச்சியடைந்தது. இது சர்வதேச அளவில் இந்தியாவை வேகமாக வளரும் நாடாக காட்டியது. ஆனால் இந்த வளர்ச்சி சீரானதாக இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், நிதி ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் அதே வேளையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அதிகரிக்கவும், வணிகச் சூழலை செயல்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், எதிர்கால வளர்ச்சியை அதிகரிக்கவும் உற்பத்திப் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும் என்று ஆசிய வங்கி தெரிவித்திருக்கிறது.
அதேபோல 2024ம் ஆண்டில் பணவீக்கம் 4.6 சதவிகிதமாக குறையும் என்றும், 2025ல் இது 4.5ஆக குறையும் என்றும் ஆசிய வங்கி தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே தேர்தலின் முக்கிய பிரச்னையாக வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் வளர்ச்சி ஆகியவை இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், முந்தைய ஆண்டை விட அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும் என்று ஆசிய வங்கி கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications