வலி நிறைந்த விளைவு ஏற்படும்.. பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை.. அணுஆயுத மிரட்டலுக்கு பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் மிரட்டியதற்கு நம் நாடு இன்று பதிலடி கொடுத்தது. ‛‛இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தலைமையிடம் இருந்து பொறுப்பற்ற போர் வெறி கருத்துகள் வருகிறது. தங்களின் சொந்த தோல்விகளை மறைக்க இந்தியாவுக்கு எதிராக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எந்தவொரு தவறான செயலுக்கும் வலி நிறைந்த விளைவுகள் ஏற்படும். சமீபத்தில் தான் (ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மீதான தாக்குதல்) அதனை நிரூபித்தோம்'' என்று மத்திய வெளியுறவுத்துறை கடும் வார்னிங் கொடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை பந்தாடியது. இதில் நொந்துபோன பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சியது. இதையடுத்து போர் நிறுத்தப்பட்டது. ஆனால் போர் நின்ற பிறகு பாகிஸ்தான் தொடர்ந்து நம்மை சீண்டி வருகிறது.

asim-munir-nuclear-treat-any-misadventure-by-pakistan-will-have-painful-consequences-says-indian-f

பாகிஸ்தான் பிரதமர்ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசீம் முனீர் உள்பட முன்னாள் அமைச்சர்கள் நம் நாட்டுக்கு எதிராகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தான் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், ‛‛சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டட்டும் என்று காத்திருக்கிறோம். அந்த அணையை கட்டி முடித்ததும் 10 ஏவுகணைகளை வைத்து தகர்ப்போம்.

சிந்து நதி என்ன இந்தியாவின் குடும்ப சொத்தா. பாகிஸ்தானிடம் ஏவுகணைகளுக்கு பஞ்சம் இல்லை. ஒருவேளை பாகிஸ்தான் வீழ்த்தப்படுவதாக நாங்கள் நினைத்தால், எங்களுடன் சேர்ந்து உலகின் பாதி நாடுகளை அழித்து விடுவோம். ஏனென்றால் பாகிஸ்தான் அணு ஆயுத நாடு'' என நம்மிடம் மண்டியிட்டதை மறந்து வாய்க்கொழுப்புடன் பேசினார்.

இந்நிலையில் தான் அசீம் முனீர் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்துள்ளார். இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அசீம் முனீர் கருத்து பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால், ‛‛இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தலைமையிடம் இருந்து பொறுப்பற்ற போர் வெறி கருத்துகள் வருகிறது. வெறுப்பு நிறைந்த கருத்துகளை தொடர்ந்து பேசுவதை கண்டிக்கிறோம்.

தங்களின் சொந்த தோல்விகளை மறைக்க இந்தியாவுக்கு எதிராக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எந்தவொரு தவறான செயலுக்கும் வலி நிறைந்த விளைவுகள் ஏற்படும். சமீபத்தில் தான் (ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மீதான தாக்குதல்) அதனை நிரூபித்தோம்'' என்று கடும் வார்னிங் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+