15 நாள் 5,000 கனஅடி திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு! சுப்ரீம்கோர்ட்டில் கூறிய காவிரி மேலாண்மை வாரியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆகஸ்ட் 29ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதியான நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வது தொடர்பாக பிரச்சனை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் தண்ணீர் தருவது இல்லை.

Asked Karnataka to release 5,000 cusecs of water for 15 days from August 29, CWMA tells Supreme Court

இதனால் பிரச்சனை என்பது தொடர்ந்து வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடப்பு ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல் உள்ளது. இதனால் காவிரி கரையோர விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா அரசு ஏற்கவில்லை. கர்நாடகாவில் போதிய அளவு மழை இல்லை. இதனால் தண்ணீர் திறக்க முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் தான் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதாவது தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு மற்றும் அடுத்த 15 நாட்கள் கர்நாடகா அணைகளில் இருக்கும் தண்ணீரின் இருப்பு குறித்த விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தவிடப்பட்டது.

அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், ‛‛ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளோம். மேலும் ஆகஸ்ட் மாதம் 12 முதல் 26ம் தேதி வரை மொத்தம் 1,49,898 கன அடி தண்ணீரை திறந்துவிடப்பட்டுள்ளது'' என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இது ஒருபுறம் இருக்க இந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனுவும், தமிழ்நாடு அரசு விளக்க மனுவும் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‛‛ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12 வரை 7,200 கன அடி நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் 5,000 கனஅடி நீரை திறக்கவே காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகவுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கையை காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நாளை (செப்டம்பர் 1 ) இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+