அசாமில் யோகி மாடல்.. தீவிரவாத அமைப்புடன் தொடர்பு எனக்கூறி மதரசா பள்ளியை இடித்து தள்ளிய புல்டோசர்
டெல்லி: அசாமில், வங்கதேச தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபரின் மதரசா பள்ளியானது ஜேசிபி வாகனம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ மற்றும் அந்தந்த மாநில போலீசார் தற்போது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டவர்களாக கருதப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த மாதம் அசாம் மாநிலத்தின் பார்பேடா, கவுகாத்தி மற்றும் மொரிகான் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அசாமில் 12 பேர் கைது
இந்த சோதனையின்போது அண்டை நாடான வங்காளதேசத்தின் அன்சருல்லா பங்க்ளா டீம் மற்றும் ஏக்யூஐஎஸ் எனும் தீவிரவாத அமைப்புடன் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

முப்தி முஸ்தபா கைது
கைது செய்யப்பட்டவர்களில் மொரிகான் மாவட்டம் மொய்ராபாரி பகுதியை சேர்ந்த முப்தி முஸ்தபா என்பவரும் ஒருவர். இவர் மதரசா பள்ளி நடத்தி வந்த நியைில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவாது தீவிரவாத அமைப்புடன் பணபரிமாற்றம் மற்றும் சிலருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறிய குற்றச்சாட்டுகளால் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதரசா பள்ளி இடிப்பு
இந்த நிலையில் முப்தி முஸ்தபா நடத்தி வரும் மதரசா பள்ளியை இன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஸ்டைலில் ஜேசிபி வாகனம் மூலம் மதரசா பள்ளி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் முன்னெச்சரிக்கையாக உரிய போலீஸ் பாதுகாப்புடன் மதரசா பள்ளி இடிக்கப்பட்டது. இதற்கு தற்போது ஏராளமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் கூறியது என்ன?
மேலும் ஹிமந்த பிஸ்வா கூறுகையில், ‛‛அசாம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மையமாக மாறி வருகிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மோரிகானில் ஜாமியுல் ஹுதா மதரசா, பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் யுஏபிஏவின் கீழ் இடிக்கப்பட்டது. இந்த மதரசாவின் 43 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்கள் இப்போது வெவ்வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்'' என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications