5 மாநில சட்டசபை தேர்தல்: கொரோனா பரவலை தடுக்க ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் வசதி! தேர்தல் ஆணையர்
டெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க 5 மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்யும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார்.
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் கொரோனா, ஓமிக்ரான் பரவலின் போது தேர்தலை நடத்துவது சவாலான விஷயம். 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்காக சுகாதாரத் துறையினருடன் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி கூடுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதி - சுஷீல் சந்திரா]

5 மாநிலங்கள்
கொரோனா பரவாத வகையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கள ஆய்வின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுகிறது.

5 மாநில தேர்தல்
உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் 690 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற. 5 மாநில தேர்தலில் 18.34 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாகும். அவர்களில் 24.9 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆகும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட்ட எதன் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்.

ஆன்லைன் வாயிலாக வேட்புமனு
தேவைப்படும் வேட்பாளர்கள் ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்யலாம். கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குகளை வாக்களிக்கலாம். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கலாம். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முன்னுரிமையாக உள்ளது.

மாஸ்க்
வாக்குப் பதிவு மையங்களில் சானிடைசர்கள், மாஸ்க்குகள் தயார் நிலையில் இருக்கும். உ.பி., பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் வேட்பாளர்கள் தலா 40 லட்சம் வரை செலவிட அனுமதி அளிக்கப்படுகிறது. கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தலா 28 லட்சம் வரை செலவிட அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத்து வாக்குச்சாவடிகளும் தரைதளத்திலேயே அமைக்கப்படும். தேர்தல் பணியாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருத்தில் கொள்ளப்பட்டு கூடுதல் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நடைப்பயணம், சைக்கிள பேரணி, பொதுக் கூட்டம், இரு சக்கர வாகன பேரணி உள்ளிட்டவை ஜனவரி 15 ஆம் தேதி வரை நடத்த தடை விதிக்கப்படுகிறது. வேட்பாளர்கள கூடுமான வரை டிஜிட்டல் முறையில் வாக்கு சேகரிப்பு நடத்தலாம். வீடு வீடாக போய் பிரச்சாரம் செய்ய 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படுவர் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications