டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதி - சுஷீல் சந்திரா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் சுஷீல் சந்திரா கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று சுஷீல் சந்திரா கூறியுள்ளார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் 5 மாநிலங்களில் மொத்தம் 690 தொகுதிகள் உள்ளன. அதில் கோவா-40,
மணிப்பூர்- 60, உத்தரகாண்ட்- 70, பஞ்சாப்- 117, உத்தரபிரதேசம் 403 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

Five States Assembly Election Dates 2022 : Facility for corona victims to vote from home says Sushil Chandra

கொரோனா பரவல் அச்சத்திற்கு மத்தியில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. செய்தியாளர்களிடம் பேசிய சுஷீல் சந்திரா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். கூடுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் என்று சுஷீல் சந்திரா கூறியுள்ளார். கொரோனா பரவாத வகையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.

5 மாநிலங்களில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனா, ஓமிக்ரான் பரவும் சூழ்நிலையில் சட்டசபைத் தேர்தல் நடத்துவது சவாலானது என்றும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கள ஆய்வின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா காரணமாக கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் 1250 முதல் 1500 பேர் வரை மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதன்முறை வாக்களிக்கும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1.14 ஆகும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் சுஷீல் சந்திரா கூறினார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் முறையில் வாக்களிக்கலாம் என்றும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முன்னுரிமை என்றும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். வாக்குப்பதிவு நேரம் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,15,368 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா அறிவுறுத்தியுள்ளார்.

English summary
Five States Assembly Election Dates 2022 ( 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள்) Sushil Chandra has said that victims of corona infection can vote from home. Sushil Chandra also said that the elderly and the disabled can vote as if they were at home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X