தலைவர் பதவியில் இல்லாத போதும் ராகுல்தான் அத்தனை முடிவுகளையும் எடுக்கிறார்.. கபில் சிபல் கடும் சாடல்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இல்லாத போதும் ராகுல் காந்திதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கலகக் குரல்கள் வெடித்திருக்கின்றன. காங்கிரஸ் தலைமை பதவியை சோனியா குடும்பத்திடம் இருந்து மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. அதேபோல் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் குரல்களும் வெளிப்படுகின்றன.

சோனியாவே தலைவர்
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நாங்கள் (ராகுல், பிரியங்கா) அனைவருமே பதவியை ராஜினாமா செய்கிறோம் என உருக்கமாக பேசினார். ஆனால் மூத்த தலைவர்கள் இதனை ஏற்கவில்லை. இதையடுத்து சோனியாவே கட்சித் தலைவராக தொடருவார் என காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்தனர்.

பதவியை விட்டுத் தரனும்
இதனிடையே ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை சோனியா காந்தி குடும்பம் விட்டுத்தர வேண்டிய தருணம் இது. மற்றவர்களுக்கும் வாய்ப்பளித்தாகவேண்டும். ராகுல் காந்திதான் அறிவிக்கப்படாத காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.

ராகுல் மீது தாக்கு
காங்கிரஸ் கட்சியில் அத்தனை முடிவுகளையும் ராகுல்காந்திதான் எடுக்கிறார். பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை ராகுல் காந்திதானே அறிவித்தார். அப்படியான அறிவிப்பை வெளியிட ராகுல் என்ன கட்சித் தலைவரா? அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் ராகுல் காந்தியே முடிவுகளை எடுக்கிறார். அதனால் ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என சொல்வதில் அர்த்தம் எதுவும் இல்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ் குரலாக இருப்பேன்.

எங்க கருத்தை கேளுங்க
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அல்லாமல் மற்றவர்களது கருத்தையும் கேட்க வேண்டும். நாங்கள் எல்லாம் செயற்குழு உறுப்பினர்கள் இல்லை. என்னைப் போல பலரும் இருக்கின்றனர். எங்களது கருத்துகளையும் கேட்டிருக்க வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார். சோனியா காந்தி குடும்பத்தின் தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய 23 தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications