எஸ்.பி.வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்- உச்சநீதிமன்றத்தில் அப்பீல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டார்; வருமானத்துக்கு அதிகமாக ரூ58 கோடி சொத்து குவித்தார் என்பது வழக்குகள். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் எஸ்பி வேலுமணி தரப்பில், தம் மீதான முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்துவிட்டது. 2020-ம் ஆண்டிலேயே எந்த நடவடிக்கையும் தேவை இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது என வாதிடப்பட்டது.

 Assests Case: AIADMK SP Velumani files appeal plea against Madars HC order in Supreme Court

எஸ்.பி. வேலுமணி தரப்பு வாதிடும்போது, தன் மீதான முறைகேடுகளை விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறை, நடவடிக்கை தேவையில்லை என 2020ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டதாக வாதிடப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்தது; ஆனால் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்து தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எஸ்பி வேலுமணி இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வலியுறுத்தும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

எஸ்பி வேலுமணி மீது கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்தார்; இந்த முறைகேடுகள் மூலம் வருமானத்துக்கு அதிகமாக ரூ58 கோடி சொத்து குவித்தார் என வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணி மீது வழக்குகள் பதிவாகின. இந்த வழக்கில் எஸ்பி வேலுமணி தரப்பில் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தாவே என டெல்லியில் இருந்து சீனியர் வழக்கறிஞர்கள் வரவழைக்கப்பட்டனர். திமுக, அறப்போர் இயக்கம் சார்பில் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ் ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு சார்பாக மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி இருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில், அறப்போர் இயக்கத்தின் சார்பில் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம் வாதிடப்பட்டது. திமுக ஆர்.எஸ்.பாரதி சார்பில், புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவின் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக,
சிறிய, நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாகவே எஸ்பி வேலுமணி, அவரது உறவினர்கள் என பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது தமக்கு ஆதரவாக வந்த அதிமுகவினருக்காக எஸ்பி வேலுமணி விருந்து ஏற்பாடு செய்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+