டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. வெறும் 10 ஆண்டில் எம்பிக்களின் சொத்து மதிப்பு 286 சதவீதம் உயர்வு..டாப்பில் பாஜக-லிஸ்ட்

2009 முதல் 2019 வரை எம்பிக்களாக தேர்வானவர்களின் சொத்து மதிப்பு 286 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், இதில் பாஜகவை சேர்ந்தவர்கள் டாப்பில் உள்ளதாகவும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் புதுதகவலை வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் எம்பியாக தேர்வான 71 எம்பிக்களின் சொத்து மதிப்பு 286 மடங்கு உயர்ந்துள்ளது என ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது. இதில் பாஜகவின் டாப் இடத்தில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தியின் சகோதரரான வருண் காந்தியும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் வேட்பாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநதிகள் பற்றிய முக்கிய விபரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதில் எம்பி, எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு, அவர்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெறும்.

அந்த வகையில் தற்போது ஜனநாயக சீர்த்திருத்தங்களக்கான கூட்டமைப்பு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 2009 முதல் 2019 வரையிலான தேர்தலில் எம்பியாக தேர்வானவர்களின் சொத்து மதிப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:

தீர்ப்பு வழங்க கட்டாயப்படுத்துறீங்களா? அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் போக கூடாது.. நீதிபதிகள் பளீர் தீர்ப்பு வழங்க கட்டாயப்படுத்துறீங்களா? அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் போக கூடாது.. நீதிபதிகள் பளீர்

286 மடங்கு சொத்து உயர்வு

286 மடங்கு சொத்து உயர்வு

கடந்த 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் எம்பியாக தேர்வான சுயேச்சைகள் உள்பட மொத்தம் 71 பேரின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. இந்த 10 ஆண்டில் இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 286 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதன்படி பார்த்தால் தற்போது சராசரியாக ரூ.17.59 கோடிக்கு சொத்துகள் அதிகரித்துள்ளது. அதாவது இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 2009ல் ரூ. 6.15 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.17.59 கோடியாக அதிகரித்துள்ளது.

முதலிடத்தில் பாஜக எம்பி

முதலிடத்தில் பாஜக எம்பி

இதில் முதலிடத்தில் பாஜக எம்பி உள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் விஜயாப்புரா எம்பியான ரமேஷ் ஜிகஜினகியின் சொத்து மதிப்பு 2009ல் ரூ.1.18 கோடியாக இருந்த நிலையில் 2014ல் ரூ.8.94 கோடியாகவும், 2019ல் ரூ.50.41 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இவர் தான் டாப் லிஸ்டில் உள்ளது. இவரது சொத்து 4189 சதவீதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 6 முறை எம்பியாக உள்ள இவர் 2016 ஜூலை முதல் 2019 வரை மத்திய இணையமைச்சராக இருந்தார்.

2வது இடத்தில் பெங்களூர் எம்பி

2வது இடத்தில் பெங்களூர் எம்பி

அதேபோல் பாஜகவின் மற்றொரு எம்பியான பிசி மோகனின் சொத்து1,306 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் இவர் 2வது இடம் உள்ளார். பெங்களூர் மத்திய தொகுதி எம்பியாக பிசி மோகனின் சொத்து மதிப்பு 2009ல் ரூ.5.37 கோடியாக இருந்த நிலையில் 2019ல் ரூ.75.55 கோடியாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

3வது இடத்தில் ராகுலின் சகோதரர்

3வது இடத்தில் ராகுலின் சகோதரர்

இதேபோல் இந்த பட்டியலில் 3வது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் சகோதரான பாஜக எம்பி வருண்காந்தி உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிலிப்பிட் தொகுதி பாஜக எம்பியாக வருண் காந்தி உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி-சஞ்சய் காந்தியின் மகன் ஆவார். கடந்த 2009ல் ரூ.4.92 கோடிக்கு வருண் காந்தி சொத்து வைத்திருந்த நிலையில் 2019 ல் ரூ.60.32 கோடியாக அதிகரித்துள்ளது.

பிரமாண பத்திரம் அடிப்படையில்...

பிரமாண பத்திரம் அடிப்படையில்...

இந்த தகவல்கள் அனைத்தும் தேர்தல் வேட்பு மனுவில் எம்பிக்கள் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவின்படி பஞ்சாப் பதிண்டாவைச் சேர்ந்த சிரோமணி அகாலிதளம் எம்பியான ஹர்சிம்ரத் கவுர் பாதலின் சொத்து மதிப்பு 2009ல் ரூ60.31 கோடியாக இருந்த நிலையில் 2019ல் ரூ.217.99 கோடியாக உயர்ந்துள்ளது. இது 261 சதவீத உயர்வாகும். இதுதவிர மகாராஷ்டிரா பாராமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பியான சுப்ரியா சுலேவின் சொத்து மதிப்பு 200ல் ரூ.51.52 கோடியாக இருந்த நியைில் 2019ல் 140.88 கோடியாக அதிகரித்துள்ளது. இது 173 சதவீத உயர்வாகும்.

English summary
According to the Democratic Reforms Association, the property value of 71 MPs elected as MPs has increased 286 times between 2009 and 2019. While the BJP is at the top, Congress MP Rahul Gandhi's younger brother Varun Gandhi has also been included in the list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X