உலகம் முழுவதும் எடுத்த அதிரடி முடிவு.. தடுப்பூசிகளை திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனகா..! இதுதான் காரணமா?
டெல்லி: கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனகாவின் கோவிட் தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா தடுப்பூசியை அந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. அதில் பக்க விளைவுகள் பிரச்சினை காரணமாக தடுப்பூசிகள் திரும்பப் பெறவில்லை எனவும்.. வணிக காரணங்களுக்காக வாபஸ் பெறுவதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.

லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
கொரோனா: கொரோனா காலத்தில் இளைஞர்களின் திடீர் மரணம் மாரடைப்பு போன்றவற்றை தொடர்பு படுத்தி அவை தடுப்பூசியால் தான் நிகழ்ந்தது என சமூக ஊடகங்களில் கூறப்பட்டது. இளம் வயது மரணங்கள் அதிகரித்த நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு மக்களுக்கு அளித்த தடுப்பூசிகளால் சாதாரண அறிகுறிகளை தவிர தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படுவது உண்மைதான் என ஐசிஎம்ஆர் ஒப்புக்கொண்டது.
தடுப்பூசிகள்: மேலும் தடுப்பூசிகள் பக்கவிளைவை ஏற்படுத்தின என மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ ஒப்புக்கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து அஸ்ட்ராஜெனகா விளக்கம் அளித்துள்ளது.கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு மற்றும் ரத்த பிளேட்லெட் குறைவு பிரச்சனை ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் கோவிஷீல்டு போட்டுக் கொண்ட மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இந்தியாவிலும் வழக்கு: இந்த நிலையில் இந்தியாவிலும் கோவிஷில்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தொடரப்பட்டன. தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவுகள் குறித்து நிபுணர் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும், பக்க விளைவுகள் காரணமாக உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அந்த மனுவை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், அதே நேரத்தில் இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து இருப்பதாக தலைமை நீதிபதியே தெரிவித்திருந்தார்.
தடுப்பூசிகள் வாபஸ்: இதற்கிடையே கொரோனா தடுப்பூசியை உலக அளவில் திரும்ப பெற்றுக் கொள்வதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிதிலும் அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக உலகம் முழுவதும் வழக்குகளும் புகார்களும் எழுந்திருக்கும் நிலையில் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதே அதே நேரத்தில் பக்க விளைவு புகார் காரணமாக தடுப்பூசிகளை திரும்ப பெறவில்லை எனவும் வணிக காரணங்களுக்காக தடுப்பூசிகள் திரும்ப பெறப்படுவதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications