நாடு திரும்பிய விண்வெளி நாயகன்! சுபான்ஷு சுக்லாவுக்கு சிறப்பான வரவேற்பு
டெல்லி: 14 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தற்போது நாடு திரும்பியுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூலை 15ம் தேதி விண்வெளியிலிருந்து பூமி திரும்பியிருந்த சுக்லா, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது இந்தியா வந்திருக்கிறார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மத்திய இணையமைச்சர், டெல்லி முதல்வர் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்திருக்கின்றனர்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து ஒருவர் விண்வெளிக்கு பறந்திருந்தது உலக நாடுகளிடையே கவனம் ஈர்த்திருந்தது. சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பியதன் மூலம், விண்வெளி துறையில் இந்தியா தவிர்க்க முடியாத நாடாக உருவாகியிருக்கிறது என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம்.
விண்வெளித் துறையில் சாதனை:
இந்தியாவிலிருந்து கடந்த 1984ம் ஆண்டு ராகேஷ் சர்மா எனும் விமானப்படை வீரர்தான் விண்வெளிக்கு சென்றார். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் 40 ஆண்டுகளாக விண்வெளிக்கு போகவில்லை. இந்நிலையில்தான் சுபான்ஷு சுக்லா விண்வெளி மையத்திற்கு சென்றிருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி அவர் விண்வெளிக்கு சென்றார். ஆக்சியம் ஸ்பேஸ் எனும் அமெரிக்க தனியார் நிறுவனம்தான் அவரை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை அகியவற்றை சேர்ந்த 3 வீரர்கள் சுபான்ஷு உடன் பறந்தார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம்தான் இவர்களை பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டு சேர்த்தது. மொத்தம் 28 மணி நேரம் பயணித்த இந்த விண்கலம் ஜூலை-26ம் தேதிதான் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது. 18 நாட்கள் இந்த மையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை சுபான்ஷு மேற்கொண்டிருந்தார். ஜூலை 14ம் தேதி சுபான்ஷு உட்பட 4 வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.
பொதுவாக விண்வெளிக்கு சென்று வந்தவர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். ஏனெனில் விண்வெளியில் ஈர்ப்பு விசை கிடையாது. எனவே கண்கள், எலும்புகள் உள்ளிட்டவை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும். இதை சரி செய்ய இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சபான்ஷு தற்போது இந்தியா திரும்பியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications