விவசாயிகளுக்கு உதவ போராட்ட களத்தில் களமிறங்கிய சட்டக்குழு
டெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு வேண்டிய சட்ட ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை வழங்ககுவதற்காக பஞ்சாப் மற்றும் அரியானாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் குழு போராட்டக் களத்தில் களமிறங்கி உள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டை சேர்ந்த 5 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு, விவசாயிகள் போராட்டம் நடத்தும் சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ளனர். 24 முதல் 34 வயதுடைய இந்த இளம் வழக்கறிஞர்கள் குழுவினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களை எளிதில் அனுகும் வகையில் முகாமை அமைத்துள்ளனர். சிங்கு எல்லையில் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் மாயமானவர்கள் ஆகியோருக்கும் இந்த குழு உதவி செய்து வருகிறது.

இது பற்றி மான்சா வழக்கறிஞரான ரமண்தீப் கவுர் (வயது 24) கூறுகையில், நாங்கள் 150 வழக்கறிஞர்களை கொண்ட குழு. நாங்கள் 3 போராட்ட களங்களிலும் முகாம் அமைத்துள்ளோம். தற்போது 181 பேருக்காக பணியாற்றி வருகிறோம். இவர்களில் 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மாயமாவனர்கள். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் கிடைக்க முயற்சித்து வருகிறோம் என்றார்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய முழு விபரம் அறிய அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வரகிறோம். தற்போது 60 குடும்பங்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களின் நண்பர்களிடம் இருந்தும் விபரங்களை சேகரித்து வருகிறோம். எங்களின் சேவை குறித்தும் ஒவ்வொரு வாகனமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் எனவும் கவுர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் சங்கங்கள் மூலம் சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் செய்தி சேனல்களில் தங்களின் உதவி எண்களையும் அவர்கள் பிரபலப்படுத்தி வருகின்றனர். எல்லைப் பகுதிகளில் இணையதள சேவை மோசமாக உள்ளதால் ஆன்லைனில் வழக்கு விபரங்களை பெறுவது சிரமமாக உள்ளதாகவும், எப்ஐஆர் எண்களை போன் மூலம் கேட்டு தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும் வழக்கறிஞர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தின கலவர சம்பவத்திற்கு பிறகு 21 பேரை காணவில்லை என சன்யுக்த் கிசான் மோர்சா அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. எப்ஐஆரில் குறிப்பிடப்பட்ட இவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் பெயர் எப்ஐஆரில் இடம் பெறவில்லை என வழக்கறிஞர்கள் குழு கூறுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications