Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டத்தால் கேரளத்திலிருந்து நாடாளுமன்றம் வரை முன்னேறிய பி.டி.உஷா - கடந்து வந்த பாதை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் விளையாட்டு மற்றும் சாதனைகளை பின்னோக்கு பார்ப்போம்.

Recommended Video

    Ilaiyaraaja MP Post | இளையராஜாவுக்கு Rajya Sabha MP பதவி *India

    நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்தான்.

    மாநிலங்களவை நியமன எம்.பிக்கள்

    மாநிலங்களவை நியமன எம்.பிக்கள்

    அதன் அடிப்படையில் தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்து இருக்கிறார்.

     யார் இந்த பி.டி.உஷா?

    யார் இந்த பி.டி.உஷா?

    இதில் பி.டி.உஷாவை யாரும் மறந்திருக்க முடியாது. 1964 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பய்யோலி பகுதியில் பிறந்த பி.டி.உஷா, சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். கடந்த 1976 ஆம் ஆண்டு கண்ணூரில் பெண்களுக்கான விளையாடுப் பள்ளி தொடங்கப்பட்டபோது மாவட்டத்தின் சார்பில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.

    13 வயதிலேயே..

    13 வயதிலேயே..

    மின்னல் வேகத்தில் ஓடு திறன் கொண்ட பி.டி.உஷா, 13 வயதிலேயே தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று 100 மீட்டத்தில் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தார். 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்க வாய்ப்பை இழந்த பி.டி.உஷா, 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார்.

    சாதனைகள்

    சாதனைகள்

    1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் அரையிறுதி சுற்றில் முதலிடம் பிடித்த பிடி உஷா இறுதியில் ஒரு நொடி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும், ஒலிம்பிக்கில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். 1986 சியோல் ஆசிய போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளப் பதக்கங்களை வென்றார்.

    திருமணத்துக்கு பின்பும் விளையாட்டு

    திருமணத்துக்கு பின்பும் விளையாட்டு

    1983 முதல் 1989 ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு 13 பதக்கங்களை வெற்றி பிடி உஷா 1991 ஆம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் சீனிவாசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 3 ஆண்டுகள் விளையாடாமல் இருந்த பிடி உஷா கணவன் அளித்த ஊக்கத்தால் மீண்டும் சர்வதேச போட்டியில் கலந்துகொண்டார். 1998 ஆம் ஆண்டு ஜப்பான் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றுள்ளார் அவர்.

     ஓய்வும் விருதுகளும்

    ஓய்வும் விருதுகளும்

    ஆசியப்போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்ற பி.டி.உஷா, கடந்த 2000 வது ஆண்டில் தனது 36 வது வயதில் ஓய்வை அறிவித்தார். மத்திய அரசிடம் இருந்து விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதையும், பத்மஸ்ரீ விருதையும், சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருதையும், சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான ஆசிய விருது, சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான உலகக்கோப்பை, சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் சிறந்த தடகள விளையாட்டு விராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் பி.டி. உஷா.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+