டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையராக அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் நியமனம்
டெல்லி தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையராக கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையராக கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.
இப்பதவியில் இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ கடந்த மாதம் விருப்ப ஒய்வு பெற்று பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட சென்றுவிட்டார். . இதையடுத்து அப்பதவிக்கு அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வந்த அதுல்யா மிஸ்ரா, ஐஏஎஸ், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் குரங்கணியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக தமிழக அரசால் நியமிக்கபட்ட விசாரணை அதிகாரியாகவும் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தலைவரும் நிர்வாக இயக்குநருமாகவும் பணியாற்றி வந்தார் அதுல்ய மிஸ்ரா. தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் தலைமைச் செயலராகப் பணியாற்றியுள்ளார்.
சாம்பலில் இருந்து பசுமைக்கு ஆக்ஸிஜன் மேனிபெஸ்டோ என்ற நூலையும், vultures of paradise என்ற நூல்களையும் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications