டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு பிடித்த ‛கிச்சடி’... சமைத்து அசத்திய ஆஸ்திரேலிய பிரதமர்... காரணம் தெரியுமா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான வர்த்த உறைவை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்த கிச்சடி சமைத்து அசத்தியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தக உறவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாத துவக்கத்தில் கூட இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: 3 துறைகளுக்கு முக்கியத்துவம்?.. என்னென்ன துறைகள்? சென்னை மாநகராட்சி பட்ஜெட்: 3 துறைகளுக்கு முக்கியத்துவம்?.. என்னென்ன துறைகள்?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தமாக இது அமைந்தது. இந்த ஒப்பந்தங்கள் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், ஆஸ்திரேலிய அமைச்சர் டேன் டீகான் ஆகியோர் இடையே கையெழுத்திடப்பட்டது.

வர்த்தக ஒப்பந்தம்

வர்த்தக ஒப்பந்தம்

இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் காணொலியில் பங்கேற்று கொண்டனர். இந்த ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதன்மூலம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே தற்போது 27.5 பில்லியன் டாலரில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 45-50 பில்லியன் டாலராக உயர்த்த இந்த ஒப்பந்தம் உதவும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

 வரிகள் ரத்து

வரிகள் ரத்து

இதன்மூலம் 4 முதல் 5 சதவீத வரி விதிப்பில் இருந்த இந்தியாவின் ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், ஆபரணங்கள் உள்பட 6 ஆயிரம் பொருட்கள் வரிகள் இன்றி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, செம்மறியாட்டு இறைச்சி, அலுமினியம் ஆக்சைடு, மாங்கனீசு, காப்பர், நிக்கல், டைட்டானியம், ஜிர்கோனியம் உள்ளிட்டவற்றின் மீதான வரியை இந்தியா ரத்து செய்துள்ளது.

கிச்சடி சமைத்த ஆஸ்திரேலிய பிரதமர்

கிச்சடி சமைத்த ஆஸ்திரேலிய பிரதமர்

இதனால் இருநாட்டின் வர்த்தக உறவும் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்த கிச்சடியை சமைத்துள்ளார். இதுதொடர்பான படங்களை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இந்தியா உடனான உறவு குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

கறி, கிச்சடி

கறி, கிச்சடி

அதில் "இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாடும் வகையில் இரவு உணவுக்காக எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாகாண கறியை (குழம்பு) சமைத்துள்ளேன். இதில் அவருக்கு பிடித்த கிச்சடியும் அடங்கும். இதற்கு ஜென்(மனைவி), மகள்கள், அம்மா ஆகியோர் அனுமதி கொடுத்தனர்'' என மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் இரண்டு படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதல் படத்தில் அவர் சமையல் செய்கிறார். 2வது படத்தில் அவர் செய்த உணவுகள் இடம்பெற்றுள்ளன.

English summary
Australian Prime Minister Scott Morrison has cooked up Prime Minister Narendra Modi's favorite Khichdi to celebrate India-Australia trade ties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X