அயோத்தி வழக்கு: வக்கீல் ராஜீவ் தவானுக்கு மிரட்டல்- சென்னை பேராசிரியருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நடைபெற்று வருகிறது. அயோத்தி வழக்கு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று ராஜீவ் தவான் சார்பாக மற்றொரு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவதூறு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகம், ராஜீவ் தவானுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். சன்னி வக்ஃபு வாரியத்துக்காக அவர் ஆஜராகக் கூடாது எனவும் மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் பேராசிரியர் சண்முகம் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்கள், கடிதங்கள் ஆகியவையும் இம்மனுவில் இணைக்கப்பட்டிருந்தது. இன்று இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பேராசிரியர் சண்முகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications